வெளிநாட்டு கல்வி தகுதிச் சான்றுகளை அங்கீகரிப்பது குறித்து செய்யப்பட்டுள்ள ஏராளமான புகார்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்து வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாரிசான் பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரான தியோங் கிங் சிங் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் உரையின் போது கூறினார்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு உள்ளூரில் சேவை செய்வதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
“அதனால்தான் சீனர்கள் (பிஎன்னுக்கு) ஆதரவு அளிக்கவில்லை. இதனை முன்னதாகவே தீர்த்திருந்தால், மக்களவையில் குறைந்த இருக்கைகள்தான் இருந்திருக்கும்…
“பிஎன் அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ‘சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். சீனர்கள் இது தீர்க்கப்படுவதை விரும்புகின்றனர்”, என்று தியொங் கூறினார்.
MIC கூத்தடிக்க லீவு கேக்கிறது …!
வெட்கம் ….வெட்கம் ….வெட்கம் ….!