‘அல்லாஹ்’ தீர்ப்பு சாபா, சரவாக் கிறிஸ்துவர்களையும் கட்டுப்படுத்துவதாகவே இருக்கும்

1 allahஅரசாங்கம் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாபா, சரவாக் ஆகியவற்றையும் பாதிக்கவே செய்யும் என்கிறது சரவாக் வழக்குரைஞர் சங்கம்.

ஏனென்றால், அரசாங்கத்தின் உத்தரவாதம் “சட்டப்படியான ஒன்றல்ல” என அச்சங்கத்தின் தலைவர் கைரில் அஸ்மி முகம்மட் ஹஸ்பி கூறினார். நீதிமன்றத் தீர்ப்பு கிறிஸ்துவர்கள் தீவகற்பத்தைச் சேர்ந்தவர்களா, சாபா, சரவாக்கைச் சேர்ந்தவர்களா என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

‘அல்லாஹ்’ என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள்  தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தால் அது சமூகத்தில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்ற அத்தீர்ப்பில் தீவகற்ப மலேசிய கிறிஸ்துவர்களை மட்டுமே அது கட்டுப்படுத்தும் என்று எந்த இடத்திலும்  குறிப்பிடப்படவில்லை என்றாரவர்.

TAGS: