வாருங்கள், புரட்சி செய்யுங்கள் என்று பிரதமர் நஜிப் ரசாக் மலேசிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி செய்யலாமா என்றெல்லாம் நினைப்பதற்கு வழி விடாமல், “அராப் வசந்தம்’ போன்ற புரட்சியாக இருக்ககூடாது என்று கூறி நஜிப் முந்திக் கொண்டார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற உலக சமுதாய வாணிக உச்சநிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நஜிப் மலேசிய இளைஞர்கள் “உலகை ஒரு சிறந்த இடமாக்குவதற்கு அமைதியான புரட்சியை” தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“பலர் நம்முடன் கை கோர்ப்பார்கள் என்று நம்புகிறேன்…ஒன்று சேர்ந்து நாம் உலகை மாற்ற முடியும்”, என்றாரவர்.
உலக சமுதாயத் தொழில் முனைவோர்களின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நஜிப், மலேசியா சமுதாய வணிகத்திற்கு சிறப்பு நிதி வழி ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.
“நிதி அமைச்சர் என்ற முறையில், நான் ரிம20 மில்லியன் அந்நிதிக்கு ஒதுக்கியுள்ளேன். பின்னர், நீங்கள் அதற்கு மனு செய்யலாம். ஆனால், உங்களின் திட்டம் மக்களில் பலரை வளம் பெறச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.
இவரும் குறுகிய காலத்தில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் போல் இருக்கு !
இதில் எவ்வளவு தொகை உங்கள் பாக்கெட்டுக்குள் போகிறது? எவ்வளவு தொகை உங்கள் உம்னோ க்ரோனிகளுக்கு போகிறது? எவ்வளவு தொகை பூமிபுத்ராக்களுக்கு போகிறது? எவ்வளவு தொகை உனக்கு லிப்ஸ்டிக் வாங்க போகிறது?
என்னைப் புரட்சிக்கெல்லாம் கூப்பிடாதிங்கப்பா…!!! நான் ரொம்ப நல்லவன், அப்பறம் என்னை தீவிரவாதி, பயங்கரவாதின்னு சொல்லிப்புடுவாங்க…!!!
புரட்சி செய்தால் மக்களுக்கு வசந்தம் ! செய்யாவிட்டால் அம்னோவுக்கு வசந்தம் ! அரிசி பருப்புக்கு கையேந்தும் தமிழனுக்கு தொடர்ந்து துன்பம் !
உங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த C4 வெடிகளை பயன்படுத்தி அல்தாந்துயா என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்து புரட்சி செய்தவர்களை விடுதலை செய்து, புரட்சி செய்துள்ளீர். எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.