நாளை சிறீ லங்காவில் தொடங்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் டிரினிடாட் டுபேகோ பிரதமர் கமலா பெர்ஷாத் பிஸ்செசார் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவுக்கான அவரது அதிகாரப்பூர்வமான வருகையை முடித்துக் கொண்ட பின்னர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் டிரினிடாட் டுபேகோ நாட்டின் குழுவிற்கு கமலா பெர்ஷாத் தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, சீனாவுக்கான கமலா பெர்ஷாத்தின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமலா பெர்ஷாத்துடன், கெனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் மற்றும் மொரீசஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள்
மிக்க நன்றி , வாழ்க !
பெண்களுக்கு இருக்கும் வீரமும், ஈவு இரக்கமும் கூட இந்த நஜிப்க்கு இல்லை.
“சோகம்” மாநாட்டிற்க்குச் செல்லாத தலைவர்களெல்லாம் தப்பித்துக் கொண்டார்கள்! செல்லுபவர்கள் மாட்டிக் கொல்லுவார்கள்.
நெஞ்ஜிலே ஈரமுள்ள ஆறறிவு படைத்த எந்த மனிதனும் அந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டான்! முதலில் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்,பிரதமர் கமலா பெர்ஷத்,மோரிசியல் பிரதமர் நவீன் சந்திர் ராம் கூலம்,மற்றும் புறக்கணிக்கும் பிரதமர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை இருகரங்களை கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன்! போரை முன்னின்று நடத்தியது இந்தியா பங்கேற்றலும்,பங்கேற்கா விட்டாலும் ஒன்றுதான்!
நமது தூர சொந்தங்களுக்கு வலிக்கிறது .ஆனால் நம்முடன் இருந்த தமிழ்நாட்டு மரகட்டைகளுக்கு வலிக்கவில்லை .இனி நாம் இந்தியாவையும் -தமிழ்நாட்டையும் ஓதுக்கி விட்டு உலக தமிழர்கள் நமக்கான முடிவை நாம்தான் எடுக்க வேண்டும் .
நண்பர் காளிதாஸ் கூறுவது உண்மையே,இங்கே நமக்கு எது சரி என்று தோணுதோ ,அதை செய்ய வேண்டியதுதான்,அங்கே பல விஷயங்களில் தரங்கட்டு போய்விட்டார்கள் ,அப்பாவை அப்பன் என்று சொல்லும் அளவிற்கு ,..
டிரினிடாட் டுபெகோ நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்செசார்,கமலா தமிழ் வம்சாவளியா?அவரைப்பற்றிய ஒரு சிறு கட்டுரையை தெரிந்தவர்கள் செம்பருத்தியில் பதிவேற்றினால்,முழுமையாக அறிந்து கொள்ளலாம்! அய்யா ஜீ,வி காத்தையா அவர்கள் ஆவன செய்வார் என்று எதிர் பார்கிறேன்!
தமிழ் திரை படங்கள் போற போக்கை பார்த்த, தமிழ் மொழி, கலாச்சாரம் எல்லாம் என்ன ஆனதுன்னே தெரிய மாட்டுது. இதுபூஊஊஇ இன்னு காரி துப்ப தோணுது! தமிழ் பெண்கள் ஒரு காலத்தில் ‘கற்பில்’ சிறந்தவர்கள் என்று புகழப்பட்ட பட்ட காலம் போயி , இப்போ பேய் பிசாசுகள் போல், அரை குறை ஆடைய்ளும், மானம் கெட்டு ஆடுவதிலும், உலக புகழ் பெற்று வருகின்றனர்…நம் தமிழ் தமிழ்/இந்திய திரை வானிலே! முதலில் இந்த ‘அரை வேக்காடு படங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால், மிச்சம் மீதி உள்ள நம் காலச்சரம் வாழும். இல்லையேல்………. நான் சொல்ல விரும்ப வில்லை அதற்கு மேல்! எல்லாம் சரி நாசம் ஆயிடு போல!!
சிதேவி அம்மா . தமிழ்நாட்டு திரை, சினிமா ,இசை, கல்வி ,அரசியல் ,
எல்லாம் தமிழரல்லாத வேந்தேரிகளின் கையில் …
கொலைவெறி புகழ் ஆந்தரா பூர்விகம் , ராஜாராணி நாயகி நாயகன் கேரளா , ஆரம்பம் இரண்டு நடிகன் நடிகை கேரளா …
மட கஜ ராஜா புகழ் நடிகன் ரெட்டிகரோ
ஆகவே தமிழர் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அரிது .. எல்லாம் கலப்படம், தமிழ் உலகில் ஒரு வணிக மொழியும்குட .. அதனால்தான் தமிழரை நோக்கி படை எடுக்கிறார்கள் .. வந்தவெரெல்லாம் வாழ்வது மட்டுமில்லை ஆள்வதற்கும் தமிழ்நாடு ஒரு சொர்க்கபுமி ..
தமிழ்நாடு ஒரு சொர்க்கபுமி தமிழருக்கல்ல ..
நம் நாட்டு பிரதமர் சுயநலவாதி .முதலீடு பணம் மட்டுமே குறிக்கோளோடு இருப்பார்கள்.நம்மை பற்றி ..பேச வேண்டாம் .இவர்களின் இனம் ,மதம் ஆகியவைக்கு ஏதாவது பிரச்சனை வந்து விட்டால்.விண்ணுக்கும் மண்ணுக்கும் தாண்டி குதித்து ,நிறைய தீர்மானங்களோடு கூத்தடிப்பார்கள்.மா இ கா காரனுங்க வாயில் வெத்தலை போட்டுக்கிட்டு அப்படியேதான் பார்துகொண்டிருப்பார்கள் .