கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும்.
அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம் வழி இன்னும் சிறப்பான வகையில் செய்திகள் வழங்கும் அடுத்த கட்டத்தை அது எட்டும்.
மலேசியாகினி மேலும் சிறப்பாகச் செயல்பட வலுவான அடித்தளம் தேவைப்படுகிறது என்று அதன் தலைமை நிருவாகி பிரமேஷ் சந்திரன் கூறினார்.
@Kini என்ற பெயர் கொண்ட அக்கட்டடதில் செய்தி வழங்கும் நிறுவனத்திற்கு தேவைப்படும் இட வசதிகள், பயிற்சி அறைகள் மற்றும் வீடியோ ஸ்டூடியோ போன்ற இதர வசதிகள் அனைத்தும் அதில் இருக்கும்.
“கடுமையாக உழைத்து முக்கியமான செய்திகளையும் கருத்துகளையும் வழங்க உதவும் மலேசியாகினியின் உண்மையான ஹீரோக்களான அதன் பணியாளர்களுக்கு தேவைப்படும் இடவசதி அதில் இருக்கும்”, என்று அதன் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் கூறினார்.
இதன் வழி மலேசியாகினி அதிகாரிகளின் தூண்டுதலால் அடிக்கடி கட்டட உரிமையாளர்களால் வெளியேற்றப்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இயலும் என்றும் அவர் கூறினார்.
2004 ஆண்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பங்சார் உத்தாமாவில் இயங்கி வந்த மலேசியாகினி அங்கிருந்து விரட்டப்பட கதையை ஸ்டீபன் விபரித்தார்.
மலேசியாகினியின் புதிய கட்டடத்தில் ஓர் இணையதளத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் என்று பிரமேஷ் சந்திரன் மேலும் கூறினார்.
வாசகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது
மலேசியாகினி வாங்கிய கட்டடத்தின் விலை ரிம6.1 மில்லியன். இதர செலவுகளையும் சேர்த்து அதன் மொத்த விலை ரிம7 மில்லியன் ஆகும்.
கட்டடத்திற்கு முன்பணமாக ரிம1 மில்லியன் கொடுக்கப்படும். ரிம3 மில்லியன் வங்கியில் கடனாகப் பெறப்படும்.
எஞ்சியுள்ள ரிம3 மில்லியன் சுமையைத் தீர்க்க மலேசியாகினி அதன் வாசகர்களின், ஆதரவாளர்களின் உதவியை நாடுகிறது.
அடுத்த இரு மாதங்களில் ரிம3 மில்லியனைத் திரட்டும் நோக்கத்தில் “ஒரு செங்கல் வாங்குங்கள்” (“Buy a brick”) என்ற திட்டத்தை மலேசியாகினி அறிமுகப்படுத்துகிறது.
அளிக்கப்படும் தொகை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். ரிம1000 வழங்குபவர்களுக்கு அதற்குச் சமமான சந்தா மற்றும் விளம்பரத்திற்கான வசதிகள் அளிக்கப்படும். அவர்களின் பெயர் அச்செங்கல்லில் பொரிக்கப்பட்டு நிரந்தமாக ஒரு சுவரில் பதிக்கப்படும்.
இதற்கான பரப்புரை நேற்றே தொடங்கப்பட்டு விட்டது. மலேசியாகினியின் பணியாளர்களும் அவர்களது நண்பர்களும் ரிம42,000 ஐ திரட்டி விட்டனர்.
“சுயேட்சையான ஊடகத்திற்கு ஓர் இல்லத்தை உருவாக்க ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்” என்று முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் கேட்டுக் கொண்டார்.
இக்கட்டடம் குறித்த மேல்விபரங்களுக்கு malaysiakini.com ஐ வலம் வாருங்கள். தொலைபேசி எண் 03-2284 3367.
செம்பருத்தியின் நிலை என்னவென்று விளக்குவீர்களா ?
செம்பருத்தியும் மலேசியாகினி யும்
உடன்பிறப்புக்கள் இல்லையா?
என்னுடைய ஆதரவு அவர்களின் கட்டிடத்திற்கு உண்டு.
எங்களால் இயன்றதை தரத்தயார். எந்த வங்கியில் போடலாம் என்பதையும், அதன் எண்களையும் தெரிவிப்பீர்களானால், எங்களது பங்கு வந்து சேரும்.
செம்பருத்திக்கும் இடம் அளிக்க வேண்டும்.
இந்தியர்களின் அவலநிலை குறித்து மலேசியாகினி எனும் ஒரு தனியார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொண்டதில்லை. உதாரணம், தியோ பெங் ஆக் இறந்த அதே நாளில் தான் குணசேகரனும் காவல் நிலையத்தில் இறந்து போனார். ஆனால் அது மலேசியாகினிக்கு பெரிய விசயமே இல்லை. இந்த தனியார் நிறுவனம் பணிமனை வாங்க நம் ஏன் பணம் தர வேண்டும்? அதற்கு பதிலாக தமிழ் பள்ளி கூடத்திற்கு வழங்குங்கள்.
செம்பருத்திக்கும் இடம் அளியுங்கள் எங்களால் இயன்ற உதவி செய்ய நாங்கள் தயார் .
வங்கியின் மூலம் பணம் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள். கட்டடம் கட்டியதும் அதன் பெயரை சீன மொழியில் கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு தமிழைப் புறக்கணிக்காதீர்கள். தமிழுக்கும் இடம் கொடுங்கள் என்பதே நமது வேண்டுகோள்.
செம்பருத்திக்கு ஒரு 3,000 சதுர அடி இப்பவே கேட்டு S&P எகிறிமென்ட் போடுங்க உதவுவோம்.நாளைக்கு நீ யாரு என்பானுங்க எல்லாம் வியாபாரம் தானே அண்ணே ! என்ன தப்பு.?
இது போன்ற நிறுவனங்கள் வாழ வேண்டும். வாழ வைக்க வேண்டும்.
ஏதாவது ஒரு வங்கியின் மூலம் ஆன்லைனில் பணம் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரு வேண்டுகோள். கட்டடம் கட்டியதும் கொட்டை எழுத்தில் சீன மொழியில் எழுதிவிட்டு தமிழை ஒதுக்கி விடாதீர்கள். தமிழுக்கும் இடம் கொடுங்கள்.
ஐயா பொன் ரங்கன் கருத்து சிறப்பு ! பிற்காலத்தில் அதே செங்கல்லை உருவி நமது மண்டையை உடைப்பார்கள் ! ஆத்துல கொட்டனாலும் ஆதாரத்தோட கொட்டனும் !
மக்களுக்கு உடனுக்குடன் இணையம் வழி தனது சேவையை செய்திடும் மலேசிய கினி க்கு வாசகர்கள் கண்டிப்பாக தங்களது பங்கை அளிக்க வேண்டும்
Typed with Panini Keypad
MALAYSIAKINI அணைத்து மொழிகளிலும் செய்தியை வெளியிடுகிறார்கள் ‘தமிழ் மொழி ( செம்பருத்திக்கும் ) ஒரு நல்ல விடிவு காலம் வந்தால் சந்தசொமாக இருக்கும் ,சில உண்மைகளை செம்பருத்தி மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது ,,இந்த செம்பருத்தி என்ற ஒரு தமிழை வாழ வைக்க வேண்டும் ,தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்
மலேசியாகினி நிரந்தர கட்டிடம் வாங்குவது ஒரு பெருமைதான், ஆனல் ஒன்று செம்பருத்திக்கும் நல்ல விடிவுகாலம் வந்தால் நன்றாக இருக்கும்.
ஏன் என்றல் பிறகு மொழி பிரச்னை இனப்பிரச்சனை என்று வரக்கூடாது எதற்கும் ஒரு சட்ட ஒப்பந்தம் செய்து கொள்வது மிகவும் சிறந்தது. நம்முடைய சமுதாயம் அன்றிலிருந்து இன்றுவரை ஏமாந்த சமுகமாக இருக்கிறது. ஏமாற்றத்தை
தவிர்க்கவும்.
நமது சமுதாயம் மைக்கா ஹோல்டிங்க்ஸ் / எம்.ஐ.சி. யூனிட் டிரஸ்ட் / கே.பி.ஜெ. மற்றும் பல இயக்கங்களில் பணத்தை போட்டு ஏமாந்தது போதும்.
தமிழுக்காக செம்பருத்தி உண்மையாக உழைத்தல் நன்கொடை கொடுக்க இந்தியர்கள் முன்வருவார்கள்.
கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம் தேவையில்லை. இனிமேல் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளவும். நன்றி. வணக்கம்.
ஒரு செங்கல் வாங்குவதில் ஒரு பிரச்சனையும்இல்லை,p wansaguru அவர்களின் கருத்தும் பரிசிலிகத்தக்கது!
தனியார் நிறுவனம் கட்டிடம் வாங்க நாம் ஏன் பணம் தர வேண்டும்? வாசகர்களுக்கு நிறுவனத்தில் பங்கு தருவார்களா?
செம்பருத்திக்கு சந்தா கட்டி என்ன பயன்? 3 மாதங்கள் முறையாக புத்தகங்கள் வந்தன, ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு புத்தகத்தையும் காணவில்லை!