இலங்கை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு இளைஞர்கள் கண்டனம்

najib-sri-lankaநேற்று, கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில், இளைஞர்கள் நால்வர், ஸ்ரீலங்கா காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அவர்கள் கைகளில், “போர்க்குற்றவாளி காமன்வெல் மாநாட்டுத் தலைவர்”, “ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்துங்கள்”, “ஸ்ரீலங்காவில் இனஒழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்”, “நஜிப், வாயை மூடிக்கொண்டிருப்பதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தி இருந்தனர். அத்துடன் அந்த வாசகங்களை உரத்த குரலில் விடாமல் முழக்கமிடவும் செய்தனர்.

அவர்கள்  எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்லர். நால்வருமே முகநூல் நண்பர்கள் என்று  அக்கண்டனக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆர்.மஹா கூறினார்.

இச்சிறிய கண்டனத்திற்கும் மஇகாவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உண்டு. அக்கட்சி புலம்பியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மஹா கூறினார்.

(நஜிப் சிறீ லங்கா சென்ற குறித்து) மலேசிய இந்தியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மஇகா முணக மட்டுமே முடியும். இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

“இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கிறோம் என்று எப்படி அவர்கள் கூற முடியும். மஇகா ஓர் அவமானம்’, என்றாரவர்.

வெள்ளிக்கிழமை பிரதமரிடம் இப்பிரச்னையை எழுப்பப் போவதவாக மஇகா தலைவர் ஜி. பழனிவேல் கூறினார். ஆனால், அதற்கு முதல் நாளே பிரதமர் கிளம்பி விட்டார்.

அந்நான்கு இளைஞர்களும் நடத்திய ஆர்ப்பாட்டம் வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டனர். சிலர் தங்களுடைய வாகனங்களின் ஹார்னை அழுத்தி ஒலி எழுப்பி அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

சிறீ லங்காவில் பல இலட்சம் தமிழர்களை கொல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டிய மகா, உலகம், மலேசிய உட்பட, மௌனியாக இருக்க விரும்புகிறது என்றாரவர்.

“மலேசிய இந்திய மக்களில் 70 விழுக்காட்டினர் தமிழர்கள். ஆனால், தமிழர்களின் உணர்வுகள் மீது நஜிப்பிற்கு அக்கறை ஏதும் கிடையாது”, என்று மஹா மேலும் கூறினார்.