கூட்டரசுத் தலைநகரின் பக்காத்தான் ரக்யாட் எம்பி-கள், கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) தலைமைகத்துக்கு எதிரில் டிசம்பர் 16-இல் மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்துவர். அக்கூட்டத்தில் கோலாலும்பூர் குடியிருப்பாளர்களிடம் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்கள் வழங்குவர். .
சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதற்கான இறுதி நாள் டிசம்பர் 17.
அதற்கு ஒரு நாள் முன்னதாக, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்ப்போர் அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்த எங்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று டிஏபி செராஸ் எம்பி டான் கொக் வை கூறினார்.
இதனிடையே, கூட்டரசுப் பிரதேச அமைச்சு, சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தும் முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தது.
இங்கு வாய்மை வெல்லாது . வெளியே போ என்று துரத்தும். முற்றி வெடித்து சிதறும் வரை பேயாட்டம் ஆடும் . பிறகு சட்டம் தன் கடமையை செய்தது என்று பல மூலைகளில் இருந்து வியாக்கீனங்கள் பறக்கும் . இது தான் ஆள்பவர்களின் பலவீனம் .