அடுத்த ஆண்டு கணிசமான அளவு சம்பள உயர்வு பெறும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் ஒரு பகுதியை மாநில கல்வி நிதிக்கு வழங்கலாம் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்திருக்கிறார்.
இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுடன் கலந்துபேசிய அன்வார், அவர்கள் ரிம1,000 அதாவது சம்பளத்தில் 20 விழுக்காட்டை ஏழைக் குழந்தைகளின் கல்விக்குக் கொடுக்கலாம் என்றார்.
“இந்த வழியில் அவர்கள் தங்களுக்குக் கிடைப்பதில் ஒரு பகுதியை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கலாம்”, என்றாரவர்.
இந்த ஆயிரம் வெள்ளி நன்கொடை பற்றிய விஷயத்தை சம்பள உயர்வு அறிவிக்கும் போதே வெளியிட்டிருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருப்போம். நாலா பக்கம் இருந்தும் எதிர்ப்பு வந்த பிறகு சம்பளத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக கொடுக்கிறோம் என்பது ஏதோ வேண்டா வெறுப்பாக கூறுவது போலிருக்கிறது.
சிலாங்கூர் மந்த்ரி புசார் அவர்களே!
உங்கள் சம்பளம் கிம்பளம் கதைய பார்த்தோம். மக்கள் பணத்தை மரியாதை இல்லாமல் எடுத்துக்க உங்கள சட்ட மன்றத்துக்கு அனுப்புன இந்த சிலாங்கூர் மாநில மக்கள செருப்பால அடிச்சீங்க. சபாஷ்!
தண்ணிக்கும் /கரண்டுக்கும் சபிசிடி தந்து மாநில விவசாய பொருட்கள விலைய ஏத்தி மக்களை பிச்சைகாரர்களலாக்கி உங்கள் சம்பளத்த மாட்டும் ஏத்திகிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ் ஓகே போட்ட உன் சைம் டாபி எம்மாற்று மூளைய எதுல அடிப்பது என்று மக்களை கேக்கிறேன் ?
1980 களில் 10 காசுக்கு வித்த மரவளிகிழங்கு இப்ப ஒரு கிலோ 3.50 காசுக்கு விக்குது.இதபபோல மாநில விவசாய விளைச்சல விலை வகைபடுத்த உங்கள் மாநிலத்தால் ஏன் முடியவில்லை. விலை வாசியால் 5மில்லியன் சரா சரி சிலாங்கூர் மக்களை பாதித்து உள்ளது.
மதிய அரசின் விலை வாசி எற்றம் சிலாங்கூர் மாநில மக்களின் சராசரி பொருளாதார நிலை கீழ் நோக்கி போகிறது என்பது எனது வாதம். உங்கள் பஜெட் மக்களுக்கு நன்மை தராது. அரசியல் நிலைத்தன்மைக்கு போட்ட தூண்டில் உன் நிபுணத்துவம். மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் மக்களுக்கு பயன் தர வில்லை. குறிப்பாக இந்தியர்கள் மலாய்க்காரர்கள் ஏழ்மை அடிமாட்டதுக்கு போய்விட்டது.
சிலாங்கூர் மாநில ஏழைகள் OKU/ சமூக நல உதவிகள் வருஷம் தோறும் மறு ஆய்வுக்கு /மனு செய்ய வேண்டும். மறுபடி மனு செய்ய கடந்த கால நிபந்தனைகள் அத்தாசு கடிதங்கள் /சிபாரிசு கையொப்பங்கள் எல்லாவற்றையும் பொறுக்கி கொண்டுவந்து கொடுத்து அடுத்த நிதி கிடைக்க மே மாதம் ஆகிவிடும் …வருஷம் முடிய அக்டோபர் மாதம் நிதி நிறுத்தப்பட்டுவிடும்.இத கவனிக்க வக்கில்லை உங்களுக்கு ஏன் சம்பள உயர்வு.?
ஆகா கூட்டி கழிச்சா வருசத்துல 6 மாதம் மட்டுமே உதவி நிதி கணக்கில் காசு வரும்.மிச்சமெல்லாம் லாபம் ? இதற்கு நாங்கள் வோட்டு போடணும். சிலாங்கூர் மாநில ஒரு நகராண்மை உறுப்பினர் கூட உங்களை PUJI பண்ணி சிலாங்கூர் கினியில் எழுதி இருந்தார். இந்தியர்களின் இலவச பேருந்து போக்கு வரத்தை கவனியுங்கள் என்று,
இப்படி ஏழைகள் வயிற்றில் அடித்து உங்கள் லாபத்தை கூட்டி உங்கள் அரசியல் தன அதிபதி சட்ட மன்ற உறுபினர்களுக்கு சம்பளதத ஏத்தி “கும்கானா ” பண்றது அநியாயமா படலையா? ape keadilan ?
மாநில பொருளாதார ஆலோசகருகே தெறியாம அவரு வாயில பூதிங் வெச்சது ரொம்ப திறமை தான்.போற போக்க பார்த்தால அடுத்ததேர்தல் எந்த கட்சி வந்தாலும் பேரம் பேசி மந்தரி புசாரு ஆவிடுவார் போல தெரியுது.
அஸ்மின் அலி சம்பள விசியத்தில் சத்தம் போடல.அன்வார் மட்டும் கொகரிகிறார். அடுத்த PKR ரின் தேசிய தலைவர் அஸ்மின் அலி வந்து மந்தரி புசார் துணை தலைவர் ஆனாலும் சந்தேகமில்லை.அல்லது இவர்கள் அவரை அமுக்கும் போது இன்றைய முதல்வர் கட்சி தாவுவார் போல தெரியுது.
இன்றைய அரசியல் நாளைய “அம்பே” என்பது எழுதப்படாத வைப்பு தொகை. எதுவும் நடக்கலாம் என்பதால் பென்ஷனுக்கு வழி பணியாச்சு போல நாங்கள் உணர்கிறோம்.அப்படி என்னதான் இவர்கள் தங்கள் சட்ட மன்ற தொகுதிகளில் சாதித்து விட்டனர். எந்த அடிப்பையில், உழைப்பில், சாதனையில் இந்த சம்பள உயர்வு ?
சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற உறுபினர்களுக்கும் அள்ளி கொடுத்தால் அவர்களும் குளிர்ச்சியடைவார்கள். நகராண்மை கழக மக்களுக்கும் சம்பளம் உயர வேண்டும் என்பது நியாயமான ஆசைதானே. சட்ட மன்ற உறுப்பினர் நாடுளுமன்ற உறுப்பினரை விட அதிகம் சம்பாதிப்பது என்ன சமத்துவமோ?
நான் பிள்ளையை கிள்ளி விடுகிறேன்,நீங்கள் தொட்டிலை ஆட்டிவிடுங்கள் என்பது போல் இருக்கு,14 ஆயிரமாக இருந்த மந்திரி பேஜார் சம்பளம்29 ஆயிரத்துக்கு போயிடுச்சி இது என்ன ஆயிரம் வெள்ளி கொசுறு! பினாங்கு மாநில முதலமைசரிடம் கிளாஸு எடுத்துக்கோங்கோ உருப்புடுவிங்கோ!
மக்களின் கேள்வி 300% – 400% சம்பள அதிகரிப்பு சரிதானா? முறைத்தான? என்பதுதான் . சமாதான பேச்சு அல்ல !! பூனை வாயில் விடுபட்டு இப்போ புலி வாயில் சிக்கிய கதையாய் போய்விட்டது. அதை செய்வோம் ,இதை செய்வோம் என்று மக்களுக்கு ஆசைகாட்டி,ஆட்சியை கைப்பற்றியதும் ஊர்பணத்தை அடித்து உங்கள் வாயில் போட்டுக்கொளும் நீங்களா ஏழைகளை காபாற்றப்போகிரீர்கள் ?? அதர்மத்துக்கு ஆளாகாதீர்கள் , அப்படி ஒரு ஆட்சி புரிந்ததாலேயே BN ஆட்சி கவிழ்த்தது , அந்த பாதையில் போக ஆசைபடாதீர்கள். ஒருவேளை கஞ்சிக்கு கஷ்டப்படும் பாமர மக்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் MR Khalid !!
நண்பர்களே ! ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கட்சி வேறு , இனம் மொழி வேறு ! ஒரு கட்சியின்மேல் வெறுப்புவருவதும்- பிறகு ஓட்டிக்கொள்வதும் அது அரசியல் வாழ்கை. இனம் மொழி விட்டுக்கொடுக்க முடியாத தொப்புள்கொடி உறவு ! இன்று கட்சிக்காக வாதாடும் நாம் , சிலாங்கூர் MB யை பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம். ஏன் ? இனம் என்ன சொல்லுது ?? 19774- 1975 இருக்கும் , Tabung Haji நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக இருந்த நமது காலிட் அவர்கள் tabung Haji யை பற்றிய பிரச்சாரம் செய்ய கூச்சிங் “PFF கேம்ப்” வந்திருந்தார். அருமையான பேச்சு , ஒரு தமிழனாக .ஒரு இந்துவாக அவர் பேச்சை என்னால் சகிக்ககொள்ள முடியவில்லை. 60 -70 பேர்களில் நான் ஒருவனே தமிழன் ஒரு இந்து . அவருக்கு அதைபற்றிய கவலையில்லை , சில நிமிடங்கள் , பொறுக்கமுடியாத அளவிற்கு அவர்களும் இனம் , அவர்களும் மதம் , அவர்களின் முனேற்றம் , அவர்களும் பிள்ளைகளின் கல்வி பற்றிய பேச்சோடு நின்றுவிடவில்லை , மற்ற இனத்தவர்களும் வழர்ச்சில் பொறாமை பேச்சு !! எழுந்தேன் , நின்றேன் , அவர்பேசும் நின்றது , வணக்கம் கூறி வெளியேறினேன். ஒரு கணம் , அனைவரின் பார்வையும் என மீதுதான். இவரும் – அப்போது UMNO ஆள் தானே ? என்ன நடந்திருக்கும் எண்ணிப்பாருங்கள் . ! இன்னும் போராடுவோம் !!