கூச்சிங் கிறிஸ்துவர்கள் கூட்டத்தில் “அல்லா” பதாகைக்கு அனுமதி இல்லை

 

Allah - Kuchingகடந்த வெள்ளிக்கிழமை சுமார் 6,000 இபான் கிறிஸ்துவர்கள்  குழுமியிருந்த கூச்சிங், போர்னியோ கொன்வென்சன் செண்டர் கூச்சிங் மையத்தில்  “அல்லா” என்ற சொல் எழுதப்பட்டிருந்த பதாகையை அகற்றுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

“கூட்டத்தினர் திகைப்படைந்தனர். எங்களுக்கு தர்மசங்கடமாகி விட்டது”, என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான பேட்ரிக் சிபாட் கூறினார்.

தாங்கள் போலீசாரின், உயர்மட்ட போலீசாரின், உத்தரவுப்புடி நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

“இச்சம்பவம் முழுவதையும் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, சோலமன் தீவுகள், இந்தியா, மங்கோலியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலிருந்து வருகையளித்திருந்த கிறிஸ்துவர்கள் கண்டது எங்களுடைய தர்மசங்கடமான நிலை இன்னும் மோசாமாயிற்று”, என்றாரவர்.

“இச்சம்பவம் உலகின் இதரப் பகுதிகளிலிருந்து வருகையளித்திருந்தவர்களிடம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தியது, அதுவும் குறிப்பாக நாங்கள் 18 – கூறு மலேசியா ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள  “சிறப்பு பாதுகாப்புகள்” என்ற பகுதியின் கீழ் முழுமையான சமய சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது பற்றி பேசிய பின்னர்”, என்று பேட்ரிக் மேலும் கூறினார்.

“ஒரு பக்கம் சரவாக்கில் முழு சமய சுதந்திரத்திற்கு பிரதமர் உறுதியளிக்கிறார். மறு பக்கம், பதாகையில் “அல்லா” என்ற சொல் இருப்பதால் போலீசார் வந்து அதனை அகற்றுமாறு எங்களிடம் கூறுகின்றனர்.”

இருப்பினும், போலீசாரின் “ஆலோசனைக்கு” மாறாக அடுத்த நாள் அந்த பதாகை போடப்பட்டது என்றாரவர்.