“மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி, ஒரு சமயத்தை இன்னொரு சமயத்துக்கு எதிராகத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது. அது நன்மையைக் காட்டிலும் தீமையையே அதிகம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது.”
மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது
நிக் வி: அந்தப் பேரணியில் பங்கு கொள்வதில்லை என பாஸ் எடுத்துள்ள முடிவு குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பாஸ் கட்சியின் ஒரு பக்கத்தை அந்த முடிவு காட்டியுள்ளது- இரு வழி மரியாதை, அமைதி, நேசம் ஆகியவற்றை சமய அமைப்புக்கள் பின்பற்ற வேண்டும் என முஸ்லிம் அல்லாத பலர் விரும்புகின்றனர். சமயம் இனவாதம் வழியாக அம்னோ கடைப்பிடிக்கும் பிரித்து ஆளும் கொள்கை அல்ல.
மக்கள் குறிப்பாக முஸ்லிம் அல்லாதார் கடந்த பொதுத் தேர்தலில் ஆதரித்த பாஸ் கட்சி அதுதான். நமது மாறுபட்ட தன்மைகளைக் கொண்டாடும் அதே வேளையில் சமய ஒருமைப்பாட்டையும் பக்காத்தான் ராக்யாட் வலியுறுத்த வேண்டும்.
நாம் அனைவரையும் மாற்ற முடியாது. என்றாலும் நாம் எங்காகிலும் ஒர் இடத்தில் தொடங்க வேண்ண்டும். எல்லா சமயங்களிலும் தங்கள் சமயத்திற்கு மாற வேண்டும் என எண்ணும் சில தீவிரவாதிகளை நாம் ஒதுக்கித் தள்ளுவோம். சமயம் என்பது அமைதியையும் நேசத்தையும் வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்.
ஜெரோனிமோ: அந்த சின்னப் புத்தியுள்ளவர்கள் (ஒரு மில்லியன் முஸ்லிம் பேரணி ஏற்பாட்டாளர்கள்) எப்படி பதில் அளிக்கப் போகின்றனர் என்பதைக் காண நான் விரும்புகிறேன்.
சீனப் பள்ளிக்கூடங்களில் 100,000க்கும் மேற்பட்ட மலாய் முஸ்லிம் மாணவர்கள் படித்துள்ளனர் அல்லது படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மண்டரின் மொழியில் பேசவும் எழுதவும் தெரியும். ஆகவே பெரும்பாலும் பௌத்த அல்லது தாவோ சமயத்தைச் சார்ந்த சீனர்கள் பின்பற்றுகின்ற வழிகள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த மலாய் மாணவர்கள் தங்கள் சமயத்தை விட்டு பௌத்தர்களாகி விடக் கூடும் என அவர்கள் கவலைப்படவில்லையா?
எல்லாவாறுக்கும் மேலாக, சீனப் பள்ளிகளில் போதிக்கப்படும் விஷயங்கள் பற்றி அந்த அரசு சாரா அமைப்புக்களில் எதுவும் கண்காணிக்கவில்லை. அந்த மாணவர்களுக்கு பௌத்த சமயத்தை ஆசிரியர்கள் போதிக்கவில்லை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?
அத்துடன் சீனப் பள்ளிகளில் மாணவர்கள் 11 ஆண்டுகளைச் செலவு செய்கின்றனர். அதே வேளையில் தேவாலயம் அமைத்துள்ள பகுதியில் சில மணி நேரமே நடைபெற்ற ஹரப்பான் கம்யூனிட்டி விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்கள் இப்போது “ஒதுக்கப்பட்டுள்ளனர்.’
உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒன்றுமில்லாத விஷயம் பெரிதாக்கப்படுகிறது. அது வெறும் கற்பனையே. வேறு ஒன்றுமில்லை.
புரோராட்: இது இன்னொரு அரசியல் நாடகம். இது செயற்கையானது, நேர்மையற்றது. அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் மலாய் ஆதரவைப் பெருக்குவதே அதன் நோக்கமாகும். அதற்கு கிறிஸ்துவர்களாக பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துவர்களும் மற்ற சமயத்தவர்களும் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இஸ்லாம் மீது மலாய்க்காரர்களுடைய நம்பிக்கை பலவீனமாக இருப்பதையே அந்த நிகழ்வு காட்டுகிறது. தங்கள் தோல்விக்கு மற்றவர்கள் மீது பழி போட அவர்கள் விரும்புகின்றனர்.
ரிக் தியோ: அம்னோ ஒரு வலையை விரித்தது. அதிர்ஷ்டவசமாக பாஸ் அந்த வலைக்குள் விழவில்லை.
ரூபன்: உண்மையில் மிக நல்ல முடிவு. ஒருவருடைய சமயத்தை வலுப்படுத்துவதற்கு எத்தனையோ அமைதியான வழிகள் உள்ளன.
எந்த ஓர் அரசியல் கட்சியும் சம்பந்தப்படவில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் நமக்கு உண்மை என்ன என்பது தெரியும். அந்த விஷயத்தில் அம்னோ மௌனம் காத்து வருகிறது. அது மிகவும் வினோதமாக இருக்கிறது.
ஜாம்ஸிபார்: எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. பாஸ் விவேகமான முடிவைச் செய்துள்ளது.