“அல்லா” விவகாரம்: நஜிப்பை வறுத்தெடுத்தார் பேராயர் பாக்கியம்

 

Allah - Archbishop - Najibபதவி விலகிச் செல்லும் பேராயர் மர்பி பாக்கியம் வழக்கமான அவரது அமைதியான போக்கிற்கு மாறாக “அல்லா” என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக்கை பகிரங்கமாக கடுமையாகச் சாடினார்.

நஜிப் இதனை அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறியதாக பாக்கியம் கூறிக்கொண்டார். இது ஏமாற்றமளிப்பதோடு அதிர்ச்சியும் அளிக்கிறது என்றாரவர்.

“அவர் என்ன சொன்னார்? அல்லா பிரச்னை குறித்து உலகமே பேசினாலும் சிரித்தாலும் மலேசியா அதனை அனுமதிக்காது அல்லாதவர்கள் அதைப் பயன்படுத்துவதை), நாங்கள் (அரசாங்கம்) அதனைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையைத் தற்காப்போம்.

“நமது கத்தோலிக்க பள்ளியில் பயின்றவரா இந்த மனிதன். அவ்வாறு பேசுவதால், நீர் ஓர் ஆரவாரச் சண்டையிடும் அரசியல்வாதி. அவருக்கு அறிவு புகட்டி அவரை ஓர் அரசியல் மேதையாக்க நான் அல்லாவிடம் பிராத்திகிறேன்”, என்று பாக்கியம் கூறினார்.

நஜிப் செய்ண்ட் ஜோன் பள்ளியில் பயின்றவர். பேராயர் வீட்டிற்கு பக்கத்திலுள்ளது. இன்று அங்கு மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கிறிதுமஸ் தே நீர் விருந்தை நடத்தியது.

முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் “அல்லா” குறித்த வாதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இன்று பினாங்கில் தேசிய அளவில் நடந்த கிறிஸ்துமஸ் திறந்தவெளி உபசரிப்பில் நஜிப் கேட்டுக் கொண்டது பற்றி கருத்துரைக்குமாறு செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு பாக்கியம் இப்பதிலை அளித்தார்.

பாக்கியம்: நஜிப்பிற்காக பிராத்தனை செய்வேன்

இக்கோரிக்கைக்கு மாறாக, நஜிப்தான் கிறிஸ்துவர்கள் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

எவ்வாறு கிறிஸ்துவ சமூகம் கத்தோலிக்க பள்ளியில் பயின்ற சிறுவனான நஜிப்புக்கு உதவியதோடு அவரது சமயத்திற்கு மதிப்பு அளித்தது என்பதை பாக்கியம் குறிப்பிட்டார்.

“சிறுவனாக இருந்ததிலிருந்து, தொடக்கப்பள்ளியிலிருந்து மூன்றாம் படிவம் வரையில், அவர் (நஜிப்) அங்கிருந்திருக்கிறார் (செய்ண்ட் ஜோன் பள்ளியில்).

“வினாவிடை வகுப்பைப் பொறுத்தவரையில், அவரது தாயார் சற்று கலக்கமுற்றார், ஏனென்றால் ஒரு சிறுவன் (கிறிஸ்துவ) சமய வகுப்பிற்கு செல்வது பற்றியதாகும்.

“ஆனால், நமது சமயச் சகோதரர்கள் மீது அவரது தாயாருக்கு நம்பிக்கை இருந்தது. சகோதரர் மேத்தியுவை அழைத்து பேசினார். கவலைப்படாதீர். அவர் அவ்வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார் என்று அவரிடம் கூறப்பட்டது”, என்று பாக்கியம் தெரிவித்தார்.

இதைப்போல், நஜிப் தமது கடமையை ஆற்றி அனைத்து மலேசியர்களுக்கும் சேவை செய்வார் என்று நம்புவதாக பாக்கியம் மேலும் கூறினார்.

“எனக்கு சீற்றம் இல்லை என்று நினைக்கிறீர்களா? இருந்தாலும், அவர் பிரதமர். அம்னோவுக்கு மட்டுமின்றி நாடு முழுமைக்கும் அவர் சேவையாற்ற உதவுமாறு நான் ஆண்டவனிடம் பிராத்திக்க வேண்டியுள்ளது”, என்றாரவர்.

பகைமையை தூண்டிவிடுதல்

“அல்லா” என்ற சொல்லுக்கு ஏகபோக உரிமையை நஜிப் வலியுறுத்துவது கிறிஸ்துவ சமூகத்திற்காக வலதுசாரிகளை தூண்டி விடுவதாக இருக்கிறது என்று பாக்கியம் மேலும் கூறினார்.

“அவருக்கு சட்டம் தெரியும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்ன என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், அவர் (நஜிப்) சொல்கிறார்: ‘ஆ, அது அங்கு அனுமதிக்கப்படுகிறது (சாபா மற்றும் சரவாக்), ஆனால், தீவகற்ப மலேசியாவில் கவனமாக இருங்கள். ஆகவே, இதைத் தூண்டி விடாதீர், நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்.’

“இது பெர்காசாகார்களை இங்கு வந்து குண்டுகள் வீசுவதற்கு தூண்டுவதாகும்”, என்று ஏமாற்றம் தொனிக்கும் குரலில் பாக்கியம் கூறினார்,

“அல்லா” என்ற சொல்லை கிழக்கு மலேசியாவில் பயன்படுத்த அனுமதிக்கும் அதே வேளையில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காக்கும் அரசாங்கத்தின் நடத்தை குறித்து சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

TAGS: