10,000க்கு மேற்பட்டோர் எச்சரிக்கையை மீறினர், போலீசார் வழி விட்டனர்

 

Anti-price hike rally1இன்று கோலாலம்பூர் டாத்தாரன் மெர்தேக்காவில் 10,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் எச்சரிக்கையும் மீறி விலை ஏற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 2014 ஆண்டு மக்களுக்கு கடும் பொருளாதார பிரச்னைகளை உருவாக்கும் என்பதலால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று கோலாலம்பூர் வீதிகளில் இறங்கினர்.

இந்தப் புத்தாண்டு தொடக்க நிகழ்ச்சியின் போது விலை ஏற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி துருன் (Gerakan Turun Kos Sara Hidup) தலைமையில் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நகரின் மூன்று மையங்கள் கூடினர் – சோகோ, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், பாசார் செனி மற்றும் மாஸ்ஜிட் ஜமெக்.

அவ்விடங்களிலிருந்து அவர்கள் பேரணியில் டாத்தாரன் மெர்தேக்காவை நோக்கிச் சென்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்று அரசாங்க தரப்பினர் குற்றம் சாட்டினர். போலீசா இப்பேரணி சட்டவிரோதமானது என்று வர்ணித்தனர்.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலைவாசிகளின் உயர்வு பிரச்னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என்று துருன் அமைப்பின் தலைவர் முகமட் அஸான் சாபார் கூறினார்.

சுவாராம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுகிரி ராஸாப் டாத்தாரான் மெர்தேக்காவை சுற்றி அந்த அமைப்பின் பத்து பிரதிநிதிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாக கூறினார்.

இன்று நடைபெற்ற விலைவாசி ஏற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.