போலீஸ்: பெரியதோர் திட்டத்தின் முன்னோடிதான் இப்பேரணி

 

Anti-price hike rally3நேற்றிரவு புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவதற்கென்று டாத்தாரன் மெர்தேக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்சியை சீர்குலைத்த அரசாங்க எதிர்ப்பு பேரணி ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கு கையாளப்பட்ட ஒரு தந்திரமான செயல் என்று புக்கிட் அமான் மூத்த போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

நாட்டின் ஜனநாயக வழிமுறையை முடக்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தரப்பினர் வகுத்துள்ள ஒரு பெரும் திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த பேரணி என்று அவர் கூறினார்.