அச்சுறுத்தல் இருந்தாலும், தேவாலயம் “அல்லா” என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறது

 

UMNO-Allah Protest2ஆர்ப்பாட்டத்திற்கான அச்சுறுத்தல்களுக்கிடையில், கிள்ளான், லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச் இன்று அதன் மலாய் மொழி பிராத்தனையில்”அல்லா” என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தியது.

பிராத்தனையின் போது அச்சொல் குறைந்தது நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், பிராத்தனையின் பெரும் பகுதியில் கடவுளைக் குறிக்கும் “துஹான்” மற்றும் “பாப்பா” என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடந்த பிராத்தனைக்குப் பின்னர் இன்று பின்னேரத்தில் மலாய் மொழியில் பிராத்தனை நடத்தப்பட்டது.

மலாய் மொழியில் நடத்தப்பட்ட பிராத்தனையில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் சபா மற்றும் சரவாக்கை சேர்ந்தவர்கள். அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள் சிலரும் இருந்தனர். இம்மலாய் மொழி பிராத்தனையின்போது வழக்காமாக 300 பேர் கலந்துகொளவது உண்டு. இன்று 200 பேர் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில், துதிப்பாடல் ஒன்று வியட்நாமிய மொழியில் பாடப்பட்டது.

இறுதியில், வட்டாரப் பகுதி சமயகுரு மைக்கல் சுவா அங்கு வந்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கு நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கும் அவர் நன்றி கூறினார்.

.

 

 

 

TAGS: