கிறிஸ்துவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கத்தை மரினா வன்மையாகக் கண்டித்தார்

 

Marina flays governmentகடந்த ஒரு வார காலமாக கிறிஸ்துவ தேவாலயங்களுக்குமுன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக மிரட்டி வரும் மிதவாத தரப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்காக அரசாங்க தலைவர்களை சமூக ஆர்வலர் மரினா மகாதிர் வன்மையாக கண்டித்தார்.

செகிரிடேரியட் சோலிடேரிட்டி முஸ்லிம் கிள்ளான் போன்ற முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்துவர்கள் அரசாங்கம் “அல்லா’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக விதித்துள்ள தடையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

அருகிலுள்ள ஒரு திடலில் முஸ்லிம் கூட்டத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய வேளையில், Marina flays government1கிறிஸ்தவர்களுடனான தங்களுடைய ஒருமைப்பாட்டைதெரிவிக்க பெரும்பாலும் முஸ்லிம்கள் அடங்கிய சுமார் 40 ஆதரவாளர்களுடன் மரினா இன்று கிள்ளான் லேடி ஆப் லூர்ட்ஸ் தேவாலயத்திற்கு வருகையளித்தார்.

இவ்வாறான மிதவாத தரப்பினரை கட்டுபடுத்த மறுக்கும் அரசாங்கத்தை அவர் கடுமையாகச் சாடினார்.

“நமது தலைவர்கள் மௌனமாக இருக்கக்கூடாது. மௌனம் காதையடைக்கிறது என்றும் அது அவலம் என்றும் அனைவரும் குறைகூறுகின்றனர்.

Marina flays government2“ஒவ்வொருவரும் திகிலடைந்துள்ளனர். இதில் நான் மட்டும் தனித்தில்லை. ஒவ்வொருவரும் கேட்கின்றனர்: நமது தலைவர்கள் எங்கே? பெருந்தலைவர் என்ற முறையில் அவர் இங்கிருக்க வேண்டும், நாமல்ல”, என்று அவர் எவரையும் பெயர் குறிப்பிடாமல் கூறினார்.

அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை குறிப்பிடுகிறாரா என்று வினவியபோது, “யாராக இருந்தாலும், அவர் இங்கிருக்க வேண்டும். தலைவர் என்ற முறையில் அவர் நம்மைவிட சிறந்தவராக இருக்க வேண்டும்.”

கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாக (ஜாய்ஸ்) மலேசிய பைபில் கழகத்தில் மேற்கொண்ட திடீர்சோதனையை அவர் கண்டித்தார்.

“ஒரு வழிபாட்டு இல்லத்திலிருந்து பைபிள்களைக் கைப்பற்றும் மக்களைக் கொண்ட நாடு என்று நாம் இப்போது அறியப்பட்டுள்ளோம். இப்படித்தான் நாம் அறியப்பட்டிருக்க வேண்டுமா?

“அல்லா மீது கிறிஸ்துவர்களுக்கு உரிமை உண்டு”

முன்னாள் பிரதமர் மகாதிரின் மகளான மரினா, “அல்லா” என்ற சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அது தேவாலயத்தினுள் நடைபெறும் ஒன்றுகூடுதலில் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் தங்களுடைய சமயத்தை முஸ்லிம்களிடம்  பரப்பவில்லை என்று மேலும் கூறினார்.

அரசாங்கம் புதிதாக அமைத்துள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் நாளை அதன் முதன் கூட்டத்தை நடத்துகிறது என்று கூறிய அம்மன்றத்தின் உறுப்பினரான மரினா, அக்கூட்ட நிகழ்ச்சி நிரலின் முதல் உருப்படி அந்த திடீர்சோதனைதான் என்றார்.

 

 

 

 

TAGS: