523 தமிழ்ப்பள்ளிகள் இருக்குமா? இருக்காதா?

tamil_school-மு. குலசேகரன், ஜனவரி 5, 2014.

 நாட்டிலுள்ள 523 பள்ளிகளில் எந்தப் பள்ளியையும் நாங்கள் மூட விடமாட்டோம் என்று சூளுரைத்தவர்கள் இன்று பேரா மாநிலத்தில் இயற்கை சாவை எதிர் நோக்கியிருக்கும் சுமர் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு என்ன வைத்தியம் செய்து உயிர் கொடுக்கப் போகிறார்கள் ?

 

இன்னும் புதிதாக கட்டப் போவதாக அறிவித்த 7 பள்ளிகளின் தற்போதைய நிலை என்ன ? அவைகளும் கருவிலேயே கலைந்து போய்விடுமா?

 

தமிழ் மக்கள், தமிழ்ப்பள்ளிகூடங்களும் தமிழ்  மொழியும் இந்த நாட்டில் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

ஆனால், இன்று பேரா மாநிலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இல்லை! 5 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளனர்.

 

தோட்டப்புறத்திலிருந்து வெளியேற்றம் காணும் இந்தியர்களின் போக்கு 70 களில் ஆரம்பித்து 80 களில் சூடுபிடித்து 90 ஆம்kula ஆண்டுகளில் உச்சக்கட்டத்தை அடைந்து இப்பொழுது ஓய்ந்துள்ளது. அப்போதிலிருந்தே தோட்டப்புறங்களிலுள்ள பள்ளியில் மாணவர்களின் பதிவு சுணங்கத் தொடங்கிவிட்டது.

 

85 விழுக்காடு இந்தியர்கள் இப்பொழுது நகர் புறங்களில் வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தேவையை பூர்த்திசெய்ய வெறும் 25விழுக்காடு  தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே  நகர் புறங்களில் இருக்கின்றன. மீதி 75 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் தோட்டப்புறத்திலும், புற நகர் பகுதியிலும் உள்ளன. அப்படிப் பார்த்தால் ஏறக்குறைய 400 பள்ளிகள் இன்னும் மாணவர்கள் குறைந்து காணப்படும் தோட்டப்புறங்களிலேயே இருக்கின்றன.

 

மிகவும் குறைவான மாணவர்கள் பயிலும் இப்பள்ளிகளின் எதிர்காலம் இன்னும் 10 ஆண்டுகளில் எந்த நிலையில் இருக்கும் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

அதே வேளையில், நகர் புறங்களில் அதிகமான இந்தியர்கள் குடி பெயருவதால் அங்கு தமிழ்ப்பள்ளிகளின் தேவையும் அதிகரித்துள்ளது..

 

இப்படி ஓரிடத்தில் குறைவான மாணவர்களுக்கு அதிகப்பள்ளிகளும்  அதிகமான மாணவர்கள் இருக்கும் இடத்தில்  குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் இருக்கும் நிலைமையை சரி செய்ய ஆவண செய்ய வேண்டும்.

 

நாம் ஒன்றும் செய்யவில்லையென்றால் ஹோலிரோடு தமிழ்ப்பள்ளியைப் போல் மற்ற பள்ளிகளும் ஒவ்வொன்றாக  இயற்கை மரணத்தைத் தழுவும்.

 

இதனால், புதிகாக தமிழ் ஆசிரியர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். இது சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும். அராசங்கமே இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் போதுமான மாணவர்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி இருக்கின்ற பள்ளிகளை தேசியப் பள்ளிகளாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

 

Najib Mic deepavali..காவின் கல்விப் பிரிவான மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டபோது கூட அதன் அடிப்படைக் கொள்கையாக இருந்தது, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி வழங்க சரியான ஏற்பாடுகளை செய்வது தருவது மட்டுமே. (The role of the Institute was to provide the necessary means to the deserving and needy Indian students, to get education.) அதில் தமிழ்ப்பள்ளிகளுக்காக எந்தவித தனிப்பட்ட திட்டங்களோ அதன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளோ மாணவர்கள் எண்ணிக்கை தரம் பற்றிய சிந்தனையோ இல்லை. நாட்டில் உள்ள 55 விழுக்காடு இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் போது அவற்றிற்கு முக்கியத்துவம் காட்டாத எம்...டி எந்த வகையில் இந்திய சமுதாயத்தை கல்வியில் முன்னேற்ற  வழி காட்ட முடியும் ?

 

கடந்த நடந்து முடிந்த ..கா கட்சித் தேர்தலில் எவ்வளவோ பேசப்பட்டன. அதில் தமிழ்ப்பள்ளிகளை எப்படி தரம் உயர்த்துவது பற்றி எதாவது தலைவர் பேசினாரா? எந்த உறுப்பினராவது இந்த வருடம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் என்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தாரா? யாராவது தமிழ்ப்பள்ளிகளின் இடம் மாற்றம் பற்றி விவாதித்தார்களா? இல்லை, இல்லை, இல்லை. இந்தியர்களுக்கு எது முக்கியம் என்று பேராளர்களுக்கு தெரியவில்லயா? தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவத்தை பற்றி  உணர்ந்திருக்கவில்லையா?

 

எனக்கு தெரிந்த ஒரே காரணம், தமிழ்ப்பள்ளிகளும் தமிழ் மொழியும் அவர்களின் முதன்மைப்  பிரச்சனை அல்ல. அது அவ்வப்போது ஏற்படும் சிறிய தீ விபத்து போல. தீ ஏற்படும் போது அதை அணைக்க அந்த வேளையில் நடவடிக்கை எடுத்தால் போதும் என்பது அவர்களின் எண்ணம்.  

 

பிழைப்பு நிமித்தம் அதிகமான இந்தியர்கள் இப்பொழுதெல்லாம் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் குடியேறுகிறார்கள். தமிழ்ப்பள்ளிக்கூடங்கள்  இது போன்ற இடங்களில் காணப்படுவதில்லை. வேறு வழியின்று மலாய்ப்பள்ளிக்கோ சீனப்பள்ளிக்கோ தங்கள் பிள்ளைகளை இந்தியப் பெற்றோர்கள் அனுப்பிவிடுகிறார்கள்.

 

பினாங்கு மாநில அரசு இப்பொழுது புதிய தொழற்சாலைகளை கட்ட செபெரங் பிறை, பத்து கவான் நிபோங் திபால் போன்ற பகுதிகளில் மட்டும்தான் அனுமதி அளிக்கின்றார்கள். ஆகவே, அதிகமான வேலை வாய்ப்புகள் இப்பகுதிகளில்தான்  தோன்றவுள்ளன. நம்மவர்களும் நிச்சயமாக அங்கு வேலை தேடி இடம் மாறிச் செல்வார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இப்பொழுதிலிருந்தே சரியான இடங்களை தமிழ்ப்பள்ளிகளுக்காக அடையாளம்  காண வேண்டும்.

 

யார் இந்த வேலையை செய்வது?

 

தனி மனிதர்களாலோ, இயக்கங்களாலோ இதைச் செய்வது சாத்தியப்படாது ?

 

இதற்கு சரியான தேர்வு ..காவினர் மட்டுமேயாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவர்கள்தான் இதற்குறைய  முறையான திட்டம் வகுத்து தமிழ்ப்பள்ளிகளின் தேவையயும் தமிழ் ஆசிரியர்களின் தேவையையும் கணித்து   அரசாங்கத்திற்கு சுட்டிக்கட்ட வேண்டும்.

 

micஇது கல்வி அமைச்சின் வேலை என்று  ..கா தட்டி கழித்துவிடக்கூடாது. பள்ளிகள் அமைப்பது அமைச்சின் வேலையாக இருந்தாலும், தமிழ்ப்பள்ளிகளின் என்ணிக்கையைப் பற்றி கல்வி அமைச்சு என்றுமே அக்கறை கொண்டதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மலாய்ப்பள்ளிகள் மட்டுமே. ஆகவே, ம.இ.காதான் இதற்கு தகுந்த அழுத்தத்தையும் நெருக்குதல்களையும் அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக அதனிடம் தமிழ்ப்பள்ளிகளுக்கென்று ஒரு தேசியத் திட்டம் இருந்திடல் வேண்டும்.

 

அத்திட்டம் நன்கு ஆய்வு செய்யப்பட்டு, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, எண்ணிக்கை, தமிழ் மாணவர்கள் சேர்ப்பு, ஆசிரியர் தேர்ச்சி இப்படி தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சவால்களையும் உள்ளடக்கிய ஒரு 10 ஆண்டு திட்டமாக இருக்க வேண்டியது அவசியம்.    

 

இந்த திட்டத்தை வரையறுக்க ..கா போர்க் கால அடைப்படையில் செயலாற்ற வேண்டும். இந்த வருடத்திற்குள் ..கா ஓர் உறுதியான கல்விப் பெருந்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்காக வெளியிட்டு, அரசாங்கத்தின்முன் படைக்க வேண்டும்.

 

அப்பொழுதுதான் தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலையாக இருக்க வழி பிறக்கும். செய்வார்களா?

 

 

 

TAGS: