பிஎன் தலைவர்கள் சிலரது இணைய அணுகுமுறை பொதுமக்களைக் கவரவில்லை என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.
“பிஎன் தலைவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டுவதைப் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பேசுகிறார்களே தவிர அவர்களுக்கு அப்பாற்பட்டவர்களுடன், யாரையும் சாராமல் தனியே இருப்பவர்களுடன் பேசுவதாகத் தெரியவில்லை- இப்படிச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும்.
“இது, நம்முடைய சமூக ஊடக வியூகம் எடுபடவில்லை என்பதைக் காண்பிக்கிறது. (பிஎன் தலைவர்கள்) சொந்த மக்களுடன் பேசி ‘சுய திருப்தி’ காணும் வேளையில் எதிரணியினர் பொதுமக்களைச் சென்றடைய முயல்கிறார்கள்”, என பெரித்தா ஹரியான் நேர்காணல் ஒன்றில் கைரி கூறினார்.
சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் பற்றிக் கருத்துரைப்பதையும் தவிர்க்க இயலாது.
அது கூடாது என்பவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்றாரவர்.
விலைவாசி உயர்வுமீது மக்களின் ஆத்திரம் உண்மையானதே என்று குறிப்பிட்ட கைரி மக்களின் மனத்தை நோகடிக்கும் வகையில் தலைவர்கள் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அறிவுரைக்கிணங்க விலைகளை உயர்த்துவதை விடுத்து செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றாரவர்.
உங்க தலை கிட்ட சொல்லி வைங்க.ஆட்சிக்கு வருமுன் விலையை குறைப்போம் என்பது ஆட்சிக்கு வந்தபின் விலையை உயர்துவது.இன்னும் 4 அண்டுகள் என்பது அதிக தூரமில்லை………..
இவன் மஹா முதலை வாயன் இவன் சொத்து கணக்கு பண்ணினால் குபெரனுக்கே தலை சுற்றும் ஆனால் பாருங்களேன் ஒன்றுமே தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா போல பேசுவதை