டிஏபி, சீனர்- அல்லாதாரின் ஆதரவைப் பெற விரும்பினால் கடந்தகால, கடினப்போக்குக் கொண்ட அணுகுமுறைகளைக் கைவிட்டு பரிவுமிக்க, இதமான அணுகுமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
இன்று, பத்து பகாட்டில், ஜோகூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய பினாங்கு முதலமைச்சருமான லிம், கட்சியினர் மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டவர்களாக தங்களைக் காண்பித்துக்கொண்டு பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவை வெற்றிகொண்டால் என்னவெல்லாம் நன்மை கிடைக்கும் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.
“மக்களை அணுக பழைய முறைகள் பயன்பட மாட்டா. புதிய முறைகள் தேவை. மக்களின் தேவைகளை உணர வேண்டும். தியாகம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே ஒயாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
“‘லிம் நல்ல மனிதர். இரண்டு தடவை சிறைக்குப் போயிருக்கிறார்’ என்று சொல்லக் கூடாது.
“சில வேளைகளில் அது சரியாக இருக்காது. நீங்கள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ அவர்கள் ‘டிஏபி-இல் சேர்ந்தால் சிறைக்குப் போக வேண்டுமா? அப்படி என்றால் எனக்கு வேஎண்டாம்’ என்று சொல்லக்கூடும்”. இவ்வாறு லிம் கூறினார்.