தமிழர்களே, ஒரு முக்கியமான வேலை!

protest against sri Lanka05இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சார்பாக ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் விவாதம் நடைபெரும். அதில் பலத்த தாக்கத்தை உருவாக்க தமிழர் நிவாரண நிதியின் காப்பாளரும் மூத்த வழக்கறிஞருமான கணேசலிங்கம், உலக தமிழர்கள் செய்ய வேண்டி ஒரு வேலையை முன்வைக்கிறார். அவரின் கடிதம் வருமாறு:

“எல்லோருக்கும் தலை வணங்குகிறேன்.

உலகத்தில் வாழும் எல்லா ஈழத்தமிழ் அமைப்புகளும் தயவு செய்து உலகத்தில் பரவியிருக்கும் 47 ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு மனு எழுதும் படி அடியேன் மிகவும் பணிவன்புடன் கேட்கிறேன்.

உடனே எழுதுங்கள். காரணம், மாநாடு நடப்பதற்கு முன்பே அரசுகள் இயங்கை சார்ந்த தங்களின் கொள்கையை தீர்மானிப்பார்கள். 

எழுதும்போது தயவு செய்து ஐக்கிய நாட்டு நிபுணத்துவ அறிக்கையையும் இணைத்து  அனுப்புங்கள். அதில் பகுதிகள் 100, 137, 176 -வை குறித்துக்காட்டி (HIGHLIGHT) அனுப்புங்கள். உலக இணைத்த  தளத்தில் 31.3.2011-இல் அனுப்பப்பட்ட முழு அறிக்கையும் தயவு செய்து அனுப்புங்கள். இது முக்கியமான வேலை.

47 உறுப்பினர்களின், வெளியுறவு அமைச்சர்களின் முகவரிகளையும் இணையத் தளத்தில் காணலாம்.

180,000 தமிழர்கள் படுகொலைசெயப்பட்டதை நினைவில் வைத்து கடுமையாக வேலை செய்ய எல்லா தமிழர்களும் கடமை பட்டிருக்கிறோம், கடன்பட்டிருக்கிறோம்.

உடனே வேலை துவக்குங்கள்.  வெற்றி தமிழருக்கே.”