கூட்டரசு அரசாங்கம் நீர் சேவை தொழில் சட்டத்தின் 114-ஆம் பகுதி வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலாங்கூரில் நீர் கட்டணத்தை உயர்த்தவும் நீர் சேவை வழங்க சலுகை பெற்றுள்ள நிறுவனங்களுக்கு நியாயமற்ற இழப்பீடுகளைக் கொடுக்கவும் முற்படக் கூடாது என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி எச்சரித்துள்ளார்.
அச்சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்று கூறிய ரபிஸி, அது சிலாங்கூர் மாநிலத்தில் நீர் சேவை வழங்கிவரும் எல்லா நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் என்றார்.
“அந்த அதிகாரத்தை ஓர் அரசியல் ஆயுதமாக அவர்கள் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராகப் பயன்படுத்தலாம், தண்ணீர் கட்டணங்களையும் கூட்டலாம்”, என்று ரபிஸி பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீங்கள் ‘நீர்’ தொடர்பில் யோசிக்கிறீர்கள். அவர்கள் ‘பீர்’ தொடர்பில் யோசிக்கிறார்கள்!
மாநில மந்திரி பெசார் இப்போது மத்திய அரசு பக்கம் சாயப் பார்க்கிறார் இனி என்ன எது வேண்டுமானாலும் நடக்கலாம்…?