“அல்லா” தடை சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது

 

Allah - Aziz Bari1தமது 10 அம்சத் திட்டம் முஸ்லிம்-அல்லாதவர்கள் ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநில சட்டங்களுக்கு ஆட்பட்டது என்று பிரதமர் நஜிப் அறிவித்த அடுத்த நாள் அச்சட்டங்களுக்கு முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.

“மாநிலங்களின் அதிகார எல்லை இஸ்லாம் வரையில்தான். முஸ்லிம்-அல்லாதவர்களின் Abdul aziz Bari on Chin Pengஉரிமைகளை பெடரல் அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது.

“முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை மாநில சட்டங்கள் ஒதுக்கிவைக்க முடியாது. அவற்றில் (அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளில்) சமயச் சுதந்திர உரிமையும் அடங்கும்”, என்று அவர் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சில மாநில சட்டங்கள் பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

“அரசாங்கம் உண்மையிலேயே அந்த 10 அம்ச தீர்வில் ஈடுபாடு கொண்டிருக்குமானால், அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்”, என்றாரவர்.

2011 ஆண்டு சரவாக் மாநில தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்-அல்லாதவர்களின் அச்சத்தை தணிப்பது அத்தீர்வின் நோக்கமாகும் என்பதை அசிஸ் பாரி சுட்டிக் காட்டினார்.

“10 அம்ச தீர்வில் பிரதமருக்கு உண்மையிலேயே உளமார்ந்த ஈடுபாடு இருந்திருக்குமானால், அதில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றும் எண்ணம் கொண்டிருந்திருப்பாரேயானால், அவர்கள் 2009 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கக்கூடாது”, என்று அரசமைப்புச் சட்ட வல்லுனரான அப்துல் அசிஸ் பாரி கூறினார்.

 

 

 

TAGS: