பாஸ் தலைவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவர்களுக்கு அணுக்கமாகவே இருந்துவருவர் என அக்கட்சியின் அமைதித் தூதர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.
சில தரப்பினர் சமுதாயத்தில் குழப்பத்தையும், வேற்றுமையையும் உண்டுபண்ணி வருவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றாரவர். முஹாஹிட், நேற்று சுங்கை பட்டாணியில் கிங் கத்தோலிக்க தேவாயலத்தில் நடைபெற்ற முஸ்லிம்-அல்லாதாருடனான ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசினார்.
“அறிவற்றவர்கள் நாட்டை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு பாஸில் உள்ள எங்களால் சும்மா இருக்க முடியாது”, என்றாரவர்.
இந்த முறை தோற்றது சரியே,அடுத்தமுறை ஜெயிப்பதே நல்ல ஆட்சி அமைக்க முடியும் என்று திட்டமோ அதாவது சீனர் கிருஸ்துவரை மெஜரூட்டியாக்கி அமைக்கும் ஆட்சி மலாய்காரன் உம்னோ மீன்டும் பாக்காத்தான் அரசில் நுழைந்து சீா்குலைக்காமல் இருக்கவோ.அரசியலில் எப்போ என்ன நடக்கும் யாருக்கும் தொியல்லே,நாராயண சமா்பணம்.
அறிவு அற்ற முண்டங்களுக்கு நல்லா உறைக்கும் படி சொல்லுங்கள் .
நல்ல முதிர்ச்சியை காட்டுகிறது. தொடரட்டும்.
பாஸிடம் இருந்து அம்னோகாரனுங்க கத்துக்க நெறைய இருக்கு, அடுத்த பொதுத்தேர்தலில் சிந்தித்து, எல்லா இனங்களும் அமைதியாக, ஒற்றுமையாக வாழ நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம்.
kayee தங்களின் கருத்தினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் விமர்சனம் செய்யவும் முடியவில்லை. சற்று தெளிவாக எழுதினால் நலமாயிருக்கும். நன்றி, நம்மையும் நமது நாடு மற்றும் அகில உலகத்தையும் இறைவன் வெகுவாக ஆசீர்வதிப்பாராக.
இக்கரை மாட்டுக்கு, அக்கறை பச்சை!. பசுத்தோல் போர்த்திய புலிகளை நம்பும் நம் மக்களின் மடமையை என்னவென்பது.