துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப் பிழைத்த குற்ற-எதிர்ப்பாளர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனை நேற்று நெகிரி செம்பிலானில் ஒரு கார் மோதித்தள்ள முயன்றது.
பாஹாவில், சட்டவிரோத செயல்களுக்குப் பேர்பெற்ற ஒரு இடத்துக்கு மாணவர்கள் சென்றுவருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றார் சஞ்சீவன்.
“மாலை 4மணிக்கு அந்த இடத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு புரோடூவா கஞ்சில் கார் என்னையே கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
“பிறகு அந்தக் கார் எங்களைப் பின்தொடர்ந்தது. அதன் ஓட்டுனர் நடுவிரலை என்னை நோக்கி நீட்டி எச்சரிப்பதுபோல் அசைத்தார்”, என்றாரவர்.
அதன்பின் அவர்கள் அங்கிருந்து வேகமாக புறப்பட்டனர். ஆனால், அந்தக் கார் விடவில்லை. 20 நிமிடங்களுக்கு விடாமல் அவர்களைத் தொடர்ந்து வந்தது.
ஒரு வளைவில் சஞ்சீவன் இறங்கிக் கொண்டார். அவருடைய கார் மட்டும் தொடர்ந்து சென்றது. அவர் இறங்கியதை அறியாத கஞ்சில் கார், விடாமல் பின் தொடர்ந்து சென்றது.
“ஒரு கட்டத்தில் கஞ்சில் என் கார்மீது மோத முயன்றதாக என் கார் ஓட்டுனர் தெரிவித்தார்”, என சஞ்சீவன் கூறினார்.
மைவாட்ச் அமைப்பின் தலைவரான சஞ்சீவன், இச்சமபவத்தை போலீசில் புகார் செய்வதற்காக பாஹாவ் போலீஸ் நிலயத்தையும் மாவட்ட போலீஸ் தலைவரையும் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால், பதில் இல்லை.
இப்போது போலீசில் புகார் செய்வதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்வதற்கு காவல்துறைக்கு ஆள் பற்றாக்குறை இல்லை. அதனால் இது தொடரும் என எதிர்பார்க்கலாம்!
இது கௌபாய் நாடு,டீம் இல்லாமல் கிடையாது யாறும்.இந்த காலம் கவணமா இருக்கனும்.கிராணம் காலம் தெய்வம் இல்லாத நேரம்.அன்வா் இண்ராப் கோரிக்கையை நிராகரித்து அவமானபடுத்த பட்டபோது வாயைமூடி வேடிக்கை பார்த சமுகம்.நீா் முதலில் உன் ஊரில் உள்ள லைன் காரனை கன்டு பேசும்,போலீஸ் ரிப்போட் பிரயோஜனம் இல்லை,மாராக ஆபத்தில் முடியும்.பேசி தீா்க பாரும் நாராயண சமா்பணம்.
இவரு என்ன சி ஐ டி சிங்காரமா ?.. இவரு இவருடைய வேலையை செயிய சொல்லுங்க … இவரு இவ்வளுவு நாளா என்ன செஞ்சாருன்னு உண்மையை சொல்ல சொல்லுங்க …
tamilanje ! அவருடைய வேலையைதான் செய்கிறார் ! எங்கே செய்ய விட்டார்கள் ? சுட்டு மருத்துவ மனைக்கு அல்லவா அனுப்பி வைத்தார்கள் !
இதில் எதோ ஒரு பெரிய புள்ளி சமந்தம் உள்ளதோ . ரகசிய போலீஸ் 115 வந்தால் தெரியும் . ஆஆபுலோ.