நிஜார் வழக்கு: நீதிபதியின் நேர்மைக்கு டிவி3 சவால் விடுகிறது

 

PAS-Nijarசமீபத்தில் பேராக் மாநில முன்னாள் மந்திரி புசாரும் பாஸ் கட்சி மேல்மட்ட குழு உறுப்பினருமான முகமட் நிஜார் ஜமாலுடினுக்கு சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் மனு ஒன்றை டிவி3 இன்று தாக்கல் செய்துள்ளது.

இன்று காலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை மலேசியாகினி கண்டுள்ளது. அம்மனுவில் வழக்கை விசாரித்த குழுவுக்கு தலைமையேற்றிருந்த நீதிபதி முகமட் அரிப் யூசுப் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் அவர் பாஸ் கட்சியுடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

பாஸ் கட்சியின் வேட்பாளராக 2004 ஆண்டு பொதுத் தேர்தலில் நீதிபதி முகமட் அரிப் போட்டியிட்டு தோற்று விட்டாலும் அவர் அக்கட்சியில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருந்தார் என்று அம்மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நிஜார் டிவி3 க்கு எதிராகத் தொடுத்திருந்த ரிம50மில்லியன் அவதூறு வழக்கில் நிஜாருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம் டிவி3 நிஜாருக்கு ரிம30,000 செலவுத் தொகையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

TAGS: