பெர்காசாவுக்கு நிதிஉதவி செய்ததை ஒப்புக்கொண்ட கூட்டரசு அரசாங்கம், அந்த வலச்சாரி என்ஜிஓ-வுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.
பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்சின்னுக்கு வழங்கிய எழுத்து வடிவிலான பதிலில் இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், ஒற்றுமை மீதான கருத்தரங்கம் நடத்த “ஒரு சிறு தொகை” கொடுக்கப்பட்டது என்றார்.
இந்தப் பதில் “அதிர்ச்சியளிப்பதாக” சிம் குறிப்பிட்டார்..
“பிரதமர் 1மலேசியா சுலோகங்களை முழங்கிக் கொண்டே தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். திரைக்குப் பின்னே, அரசாங்கம் பைபிளை எரிப்பதாக மருட்டும் ஒரு என்ஜிஓ-வுக்கு நிதியுதவி செய்கிறது”, என்றாரவர்.
இஸ்லாமும் தீவிரவாதமும் என்று முத்திரை குத்திய அமேரிகாவிடம் மலேசியா ஜனனாயக நாடு நாங்கள் தீவிரவாதி அல்ல என்று விலக்க கடமை மலேசிய அரசாங்கத்துக்கு உள்ளது.ஆதலால் பெர்காசா போன்ற அமைப்பை நிதி கொடுத்து வளரவிடுவது தவிர்கபட வேண்டிய ஒன்று.அரசாங்கம் அதன் ஏஜன்சி இயங்கும் பட்ஷத்தில் இன வெறியா்கள் எதற்கு.மலேசியாவை உலகம் அனுக்கமாக கண்கானிப்பதை அறியாதவா் இல்லை நீர்.எல்லா பிரதமா் வரிசையில் நீரும் வுண்டு வும்மை 1 மலேசியா பிரதமா் என்பதா அல்லது ………,நாராயண சித்தம்.
கையே……………..!!!!!!!!!!!!