நேற்று அதிகாலையில் சாலை விபத்தில் மரணமுற்ற நாட்டின் மூத்த அரசியல்வாதி கல்பாலுக்கு இன்று மாலை (ஏப்ரல் 18 ) முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான் எங் வரவேற்றார்.
இரு வேறுபட்ட அரசியல் கூட்டணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமது இரங்கலைத் தெரிவிக்கையில் சாமிவேலு, லிம்மை கட்டித் தழுவிக் கொண்டார்.
சாமிவேலுவின் முகம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியது. “நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம்”, என்று அவர் பின்னர் கூறினார்.
“எப்போதும் மக்களின் நலனுக்காக கர்பால் பல பிரச்சனைகளை எழுப்பி வந்தார்”, என்று மஇகாவின் முன்னாள் தலைவரான சாமிவேலு மேலும் கூறினார்.
“கர்பாலின் மரணத்தை கேட்டபோது என்னால் அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.
“நாடாளுமன்ற விவாதங்களின் போது கர்பால் வாக்குவாதம் செய்வதுண்டு. ஆனால், வழக்குரைஞரான அவர் ஒரு தலைவர், நம்பிக்கைக்குரியவரான அவர் குற்றம் குறையின்மையை நாடுபவர்.”
வழக்குரைஞராக இருந்து அரசியல்வாதியான கர்பாலை முதலில் புலி என்று வர்ணித்தவர் சாமிவேலுதான். அவரை “நீதிமன்றத்தின் புலி” என்று கூறிய சாமிவேலு தம்மை ஒரு “சிங்கம்” என்று கூறிக்கொண்டார்.
இதற்கு எதிர்வினையாற்றிய கர்பால், சாமிவேலு சிங்கமாகவும் தாம் புலியாகவும் இருக்கலாம் என்று கூறிய அவர் சுதாரித்துக் கொண்டு மலேசியாவில் சிங்கங்கள் இல்லையே என்றார்.
74 வயதான கர்பால் ஓர் இளைஞரைப் போல் உழைத்தார் என்று சாமிவேலு மேலும் கூறினார்.
கெராக்கான் துணைத் தலைவர் டாக்டர் சியா சூன் ஹய் கட்சியின் இதர தலைவர்களுடன் கர்பாலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். அவர்களின் கட்சியின் மாநில தலைவர் தெங் சாங் இயோவ் மற்றும் மாநில செயலாளார் ஓ தோங் கியோங் ஆகியோரும் அடங்குவர்.
1974 ஆம் ஆண்டில் தாம் இளவயதினாராக இருக்கும் போதே கெடா சட்டமன்ற பண்டார் அலோர் சீதார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கர்பாலை தெரியும் என்றார்.
“அவரைக் கண்ட அப்போதே அவர் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அப்போது மற்றவர்களை விஞ்சி நின்ற அவர் அரசியலில் மட்டுமல்லாது சட்டத்திலும் பெரும் போர்த்திறனை விட்டுச் செல்கிறார்”, என்று முன்னாள் டெர்கா சட்டமன்ற உறுப்பினரான சியா கூறினார்.
“நாடாளுமன்றத்தில் கோப்பி அருந்துவதுண்டு”
பின்னர், பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் வந்தார். 1986 இல் அவர்கள் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக கூறினார்.
“எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், நாங்கள் நாடாளுமன்றத்தில் கோப்பி அருந்துவதுண்டு. அவர் ஒரு நண்பர்”, என்றார் ஷகிடான்.
“நாம் வேறுபட்டிருந்தாலும் ஒன்றாக இருக்கலாம். இது ஒற்றுமைக்கும் மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பதற்குமான ஒரு முன்மாதிரி”, என்று அவர் மேலும் கூறினார்.
“இது போன்ற அரசியல் தொடரும் என்று நம்புவோம். கர்பால் எப்போதுமே ஒரு திறந்த மனம் படைத்தவராக காணப்பட்டார்”, என்று ஷகிடான் வலியுறுத்திக் கூறினார்.
லிங்: கர்பால் எனது நண்பர்
கர்பாலுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க வந்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக்கை குவான் எங்கும் கிட் சியாங்கும் வரவேற்றனர்.
கர்பாலின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த லிங், அந்த மூத்த வழக்குரைஞர் தமது நண்பர் என்று கூறினார்.
“அவர் ஒரு துடுக்குத்தனமான மாணவர். 1961 ஆம் ஆண்டில், நாங்கள் சிங்கப்பூரில் மலயா பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்களாக இருந்தோம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்,
“தேர்வுகளில் அவர் முதல் தர மாணவராக இருந்ததில்லை. இது ஒரு சிறந்த வழக்குரைஞராவதற்கு ஒருவர் சிறந்த மாணவராக இருக்க வேண்டியதில்லை என்பதைக் காட்டுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
பிஎன் மற்றும் மசீச மீது கர்பால் கூறிய குறைகள் பற்றிய வினவிய போது, கர்பால் என்றுமே தனிப்பட்ட விரோதம் காட்டியதில்லை என்று லிங் கூறினார்.
“கர்பால் என்னைத் திட்டியதாகவோ, நான் கர்பாலை திட்டியதாகவோ நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் டிஎபியை திட்டியதுண்டா?”, என்று அவர் வினவினார்.
அவரைத் தொடர்ந்து சுகாதார அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டாக்டர் எஸ். சுப்ரமணியம், கட்சியின் மாநில இளைஞர் பிரிவு செயலாளர் ஜே. தினகரன் மற்றும் மசீச உதவித் தலைவர் சியு மெய் ஃபன் ஆகியோரும் வந்திருந்தனர்.
அரசியலில் இரு துருவங்களாக,கொள்கைகளில் மாறு பட்டிருந்தாலும் கர்ப்பாலுக்கு நேரில் இறுதி கண்ணீர்அஞ்சலி செலித்தியது தமிழனின் பண்பாடு வெளிப்பட்டது!
கர்பால் கொள்கையில் உண்மையாக இருந்தார் ,
சாமி சமுதயாதுக்கு சாவு மணி அடித்து சமாதியும் கட்டி விட்டார் ..!
உயிருடன்
இருக்ம்போது
அவரை
வறுத்தெடுத்த
சாமிவேலு
இப்போ
எதற்கு
போலியா
அஞ்சலி செலுத்துகிறார்? எல்லாம்
நாடக மேடை
… மலேசியா
வில்
உள்ள
எந்த இந்தியனும்
நம்ப
மாட்டான்
இந்நாட்டின் மீதும் இந்நாட்டின் மக்கள் மீதும் அக்கறை அக்கறை உள்ள ஒவொருவரும் கர்பாலின் மரணத்தை பேரிழப்பாக கருதுவர். இறைவன் அவரை ஆசிர்வதிப்பாராக.
சாக வேண்டியவன் செத்தால் சந்தோஷப் படலாம். என்ன செய்வது! கர்பால் கடைசிவரை புலியாக இருந்தார், இறந்தார்! புளியாகவும் இருக்கவில்லை, புல்லையும் தின்னவில்லை!
சாமிவேலு ஒரு துடிப்பு மிக்க தலைவராக ,இருந்தாலும் ,அதிரடி முடிவிலும் ஒரு தைரியமானராக இருந்தார் .இவரை கண்டால் பயமும் மரியாதையும் மக்களிடம் முன்பு இருந்தது ,யாருக்கும் பயப்படாத சிங்கமா இருந்தார் ஒரு காலத்தில் ,,இவர் செய்த தவறு என்ன வென்றால் இந்த அதிரடி செயலும் எதிர்க்கும் தைரியமும் UMNO-விடம் காட்டி இருந்தால் இன்று தமிழர்கள் பிளவு பட்டு இருக்க மாட்டார்கள் ,இவருக்கும் கடவுளாக மதித்திருப்பார்கள் நம்ம தமிழர்கள், UMNO-வுக்கு கூஜா தூக்கி தூக்கி தமிழர்களின் செல்வாக்கை இழந்தார் ,சரி பருவாவில்லை தமிழனாச்சே நல்லா இருக்கட்டும் ,ஒரு நன்றி விசுவாசமுள்ள நண்பரை( கர்பால் SING ) இழந்து விட்டதுக்கு ஆறுதல் சொல்ல வந்ததே பெரிய விசியம் ,,தமிழன் வாழ்க
காலம் மாறும்போது எண்ணங்களும் மாறும்!
பொது விஷயங்களில் பல கருத்து வேறுபாடுகள் இருக்காலாம். ஆனாலும் இறுதி காலங்களில் அவையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்து, கர்பாளின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை(சாமிவேளர்) நாம் வசைப்பாடுவது அவ்வளவு சரியான செயலல்ல என்றே எனக்குப் படுகிறது. நேற்றைய நாள் முழுதும் நான் கர்பாளின் இல்லத்தில்தான் இருந்தேன். அனேக ஆளும்கட்சி பிரமுகர்கள் வந்து கர்பாளின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதில் லிம் கிட சிங், கர்பாளின் பரம வைரியான லிங்க் லியோங் சிக்கும் ஒருவர்.
இங்கு சில அசிங்க புடிச்சவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை ,சாமீ வேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதில் இவனுகளுக்கு என்ன வந்ததுன்னு தெரியவில்லை ,டேய் சக்ரவர்த்தி எதற்கு எதற்கு அரசியல் பண்ணுவதுன்னு தெரியாதா ?முட்டாள் முண்டமே நீ சாட மாதிரியா ,யாரை சாக வேண்டியவனு சொன்னனு புரியுது .
அரசியல் வேரு நட்பு வேரு, நம்மிடம் பலகிய ஒருவர் மரணமுற்றால் பகைப் பாராட்டாமல் ஒருவர் அனுதாபம் தெரிவிக்க வந்தால் அவரையும் குறை கூறும் . பண்பு இல்லாதவர்களை எண்ணி வேதனை அடைகிறேன்.
சுபாங் ஜெயாவிலுள்ள சீபில்டு ஆலய விவகாரம் உள்பட இந்திய சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்னைகளுக்கு கர்ப்பால் மஇகாவுக்கு உதவியுள்ளார். அந்த நன்றியை சாமிவேலு கண்ணீர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழனின் பண்பாடு. எதிரியாக இருந்தாலும் அவர் இறந்தால் உரிய மரியாதை கொடுப்பான். அம்னோ, பெர்க்காசாவிலுள்ள சில மிருகங்களை விட சாமிவேலு உயர்ந்தவர்தான்.
மோகன் மோகன் நீங்களும் பல்லாண்டு வாழவேண்டும் …
சாமி வேலு நல்ல தமிழன்தான் … உமைதுரையவிட இவர் பரவாஇல்ல
மட்டிதுரை வாயில் ரெண்டுகொளுகட்டை உள்ளது …
தெலுங்கு சங்கத்தலைவன் அச்சைகுமாரு மாதிரி இனத்துக்காக எவனாச்சும் என் ஜி ஒ வச்சிருக்கான் ??? எல்லாம் sontha அரசியல் மானியம் டதோ பட்டம் கிடைக்க அலைகிறான் … .. மீண்டும் சாமிவேலு சிறந்த தலைவன் (தமிழன்) சாமி வேலுவை வைத்து தமிழர்களுக்கு உதவ எந்த இனஉணர்வு உள்ளதமிழனும் இருக்கவில்லை !!!!
கலை
நீங்க சொன்னது சரி
.. தமிழ் நாடில
தமிழ்
படம் போடா முடில
. மீன்
பிடிக்க முடில
.. தமிழ் நாட்டில்
தமிழனை
தெலுங்கன்
ஒதைகிரான்
…. கேட்க நாதி இல்லை
… இதையே
ஆந்திராவில
தமிழன் செய்ய
முடியுமா
? தமிழனுக்கு
ஒற்றுமை
இல்லை
அமரர் கர்ப்பால் சிங்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலும் உண்மையான இனப் பற்று கொண்ட நண்பர்கள்தான். அரசியல் என்ற திடலில் இரு துருவங்களாக இருந்தார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு
மத்தியில் அன்பு-பாசம்-மரியாதை-ஒரே சமுதாய உணர்வு இல்லை
என்று சொல்லிவிட முடியாது. சாமிவேலு பினாங்கு சென்று அமரரும் அவரின் நண்பருமான கர்ப்பால் சிங்கின் நல்லுடலுக்கு மரியாதைச் செலுத்தியதைத் தப்பாகச் சொல்வதைப் படிக்கும்போது வேதனைத்தான் மிஞ்சுகிறது. காரணம், அவர்கள் இருவரும் உண்மையாகவே மிகச் சிறந்த நண்பர்கள்.
சாமிவேலுவை சாடுவதை கர்பால் சிங் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் தோழர்களே ! பத்து கர்பால் சிங் தேவைப்படும் நேரத்தில், இருந்த ஒரு சிங்கத்தையும் சாலை விபத்தில் பறிகொடுத்தோம் ஐயா ! அன்னாரின் குடும்பத்துக்கு என் குடும்ப சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் !
எல்லோருக்கும் நல்ல பெயர்,கெட்டபெயர் வுள்ளது,அரசாங்கம் கூட்டனிகள் இனக்கபோக்கு சிலறுக்கு அதிப்ருத்தியை ஏற்படுத்துவதில் சந்தேகமில்லை.நம்மவரை மிதித்து மாற்றானை சிரசில் சுமப்பது ஒன்றும் புதியது இல்லை.நாராயண நாராயண.
சாமிவேலு தீயவர் யென்று யாராவது ஒரு அரசியல் வாதி சொல்லட்டும்,லின்டோங்ஙான் இனகலவரத்தின் போது நமக்கு சாதகமாக வந்தவர் யார்,சாமிவேலுக்கு ஒரே ஒரு டிரபிக் போலீஸ் எஸ்கோட் வந்தது,ஏன் தெரியுமா?,அம்னோவை எதிர்த்து வந்தமைக்கு பி.என் கொடுத்த பரிசு.கலவர பூமிக்கு செல்லும் மந்திரிக்கு கொடுக்கபட்ட பாதுகாப்பு.தனித்து கேம் போட்டு அமர்ந்தவர் சாமிவேலு.இந்த துணிவு எவறுக்கு வரும்.நம் சமுகத்தை திருத்த இந்துக்களுக்கு கொடுக்கபட்ட மாணியத்தை கொண்டு கல்லூரிகள் அமைத்தார்,இன்று எவ்வளவோ பிள்ளைகள் கல்வி, அறிவு பெறுகின்றனர்.நாராயண நாராயண.
சாமிவேலு இருந்த கால கட்டத்தில் மஇகாவில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லை ஆனால் இப்பொழுது உள்ள சூல் நிலையை பார்த்தோமேயானால் தெலுங்கர்களின் ஆதிக்கம் சற்று இல்லை இல்லை அதிகமாவே இருக்கின்றது.தமிழர்களே நம்மிடம் எப்பொழுது ஒற்றுமை உண்டாகிறதோ அப்பொழுதுதான் நாம் இந்நாட்டில் தலைநிமிர்ந்து நிட்போம் இல்லையேல் ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல ஆகி விடும். வாழ்க தமிழர்கள்!!!!
தமிழ்நாட்டு தமிழர்களின் நிலை மலேசிய தமிழர்களுக்கும் மெதுவாக ஆரவாரமின்றி திராவிட இந்துத்துவா இந்திய கூட்டு சதியில் நடந்தேறுகிறது … வணிகநிலயங்கள் ,ஆலயங்கள் ,பாபா குரு பஜன் ,கல்விக்கூடங்கள் , அரசியல் , நாட்காட்டி , (காலண்டர்) மாற்றம்களையும் திராவிட முன்னேற்றத்தையும் எழுச்சியும் நாம் காணலாம் . என்றுமில்லாதவாறு ஐயப்ப ஆலயங்களும் சங்கங்களும் நாளுக்குநாள் பெருகிறது!! புதுசு புதுசாக இந்திய சாமியார்களுக்கு இங்கு கிளைகள் டி டி அம்மா ,கட்டிபுடி அம்மா , ராம ராமா ,ஆனந்த மார்க்கா , ஜோகி ,இன்னும்பல ….
புதுசு புதுசாக வணிக நிறுவனங்கள் திறக்கிறார்கள் ,, பெரும்பாலும் திராவிடர்கள் .. அங்கு விற்கும் வழிபாட்டு பொருட்கள் கன்னட ,அந்தரா , கேரளா பொருட்கள் !! இவைகளை நாம் கொள்முதல் செய்யலாமா ?? இவர்களுக்கு நாம் அதரவு கொடுப்பதால் நன்மையா ? தீமையா தமிழருக்கு நன்மை இலை தீமை அதிகம் .. சின்ன உதாரணம் சைக்கிள் உதுபத்தி கன்னடத்திலிருந்து வருகிறது ..
பார்பனருக்கு சொந்தமானது .. உதுபத்திவான்கினால் ஒரு நாட்காட்டி இலவசம் .. என்பாட்டி கடை உளியரிடம் தம்பி நல்ல வாசமா ஒரு பத்தி கொடு என்றிருக்கிறார் உழியர் சைக்கிள் உதுபத்தி கொடுத்துள்ளார் கையேடு இலவச நாட்காடியும் ..அதில் தமிழருக்கு ஒவ்வாத வழிபாடு குறிபிட்டுள்ளது , பெரிய சுருட்டைமுடி பாபா ஜெயந்தி இதெல்லாம் நமக்கு தேவையா ? அப்புறம் படம் அனைத்தும் கன்னட சுற்றுலா விளம்பரம் .. கன்னடத்துக்கு சுற்றுலா வந்து அழகிய இயற்கைய ரசியுங்கள் !!!
தமிழர்கள் தமிழர்களுக்கு aatharavu கொடுக்க வேண்டும் .. பார்பனர்கள் ஈழத்தமிழர் அழிப்புக்கு சகுனி வேலைபார்த்தவர்கள் … தமிழச்சி மார்பை அறுத்த கொலைகாரன் ராஜ பக்சாவுக்க்கு பாரத ரத்தனா விருது கொடுக்க பரிந்துரைகிறான் .. சு. சாமி ,ஹிந்து பத்திரிக்கை ராம் , துக்ளக் சோ என்கிற சொறிநாய் .. பெரும்பாலான உடகம்கள் இவர்களின் கையில் நம் மலேசிய பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் உடுருவி விட்டார்கள் .. thr ராகா தமிழரல்லாதார் வசம் .. தமிழ் படும்பாடு .. மொழிகொலையை சீர்படுத்த சரியான ஆண் தமிழனிடம் இல்லைபோலும் !!! எல்லாம் அரசியலுக்கு அச்சாரம் போடும் அன்சடிகள் அதிகம் ….
ஆரியமும் திராவிடமும் ஒன்னு . அத அறியாதவன் வாயில் மண்ணு .
மிகச்சரியாக சொன்னீர்கள் திரு. கலை அவர்களே!!!! குரு வழிபாடு என்று சொல்லிக்கொண்டு இங்குள்ள தமிழர்களை முட்டாளாக்கும் இந்த திராவிடர்கள், வரும் காலங்களில் நம் தமிழ் மொழியையே மாற்றி அவர்களின் திராவிட மொழியை பயன்படுத்த வேண்டும் என்று கேட்பார்கள்.தமிழர்களுக்கு ஏன்தான் இந்த சாபக்கேடோ?நாளுக்குநாள் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடையாளத்தை நாம் இழந்து வருகிறோம் என்று நினைக்கும் பொழுது,மனம் வேதனையாக உள்ளது. பாவம் தமிழர்கள்!!!!!!
இது மலேசிய நாடு,பல இனம் வாழும் நாடு.இனங்களுக்கிடையே நல்லினக்கம் எல்லோராலும் பேனப்பட வேண்டும்.இந்த நாடு யாறுக்கும் தாரை வார்கப்படவில்லை,வாழ்க நாராயண நாமம்.
நாம் பள்ளியில் படிக்கும் போது பாடம் சொல்லி கொடுத்தார்களே
அவர்கள் தான் குரு. மற்றவர்கள் எல்லாம் திருட்டு பயல்கள்.
வழிகாட்டியே குரு,குரு அற்றவன் கல்லாதவனே.கல்லாதவன் கருத்து சபையெராது.குருவை அறிமுகம் செய்யும் யாவறும் கற்றவரே,வாழ்க நாராயண நாமம்.
அதுதான் சாமீ வேலு .நாம் வாழ்ந்த காலத்தில் நாம் கண்ட சிறந்த கொள்கைவாதி கர்பால். சாமிவேலும் சிறந்த தலைவர்தான் .அவர் இடத்தை இன்னும் யாரும் நிராபவில்லை .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் . அவரின் கும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் .
கலை கூறியதில் உணர்வும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது.
இவற்றில் இருந்து மீளவேண்டும் எனில் தமிழன் ஒன்றுபடவேண்டும்.நமது பயணத்தின் ஒவ்வொரு அடியும் அதை நோக்கி இருக்கவேண்டும்.
கர்பாலின் இறப்பு மலேசியரின் மனதை தொட்டு கண்ணீரும்
வந்தது காரணம் அவர் சமூதாயத்தை சுரண்டவில்லை ,ஆனால் சாமி வேலு செத்தால் ஒரு நா… கூட வாராது .
ஆமாம் சாமி வேலுக்கு சாவு கிடையாதே , தெரிய வில்லையா நைனா சித்திர குப்தனுக்கு லஞ்சம் கொடுத்து
சாவின் தேதியை பதிவேட்டில் இருந்து நீக்கி விட்டாரே லஞ்ச பணம் மைக்கா ஹோல்டிங் பணம் நைனா .