கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும்.
மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார்.
ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங் மக்கள் உலாவும் அப்பகுதி “கர்பால் சிங் டிரைவ்” அல்லது “பெர்சியாரான் கர்பால் சிங்” என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து எதிர்வரும் மாநில ஆட்சிக்குழு முடிவு செய்யப்படும் என்று குவான் எங் மேலும் கூறினார்.
கர்பாலின் மரணத்திற்குப் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்பாலின் துணைவியார் குர்மிட் கவுர், கர்பாலுக்கு அளிக்கப்படுள்ள கௌரவத்திற்கு மாநில அரசுக்கு நன்றி கூறினார்.
மாநிலத்தின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கு விட்டு கர்பாலுக்கு மரியாதை தெரிவித்ததற்கும் அரச மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி அளித்ததற்கும் அவர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
என்னைக் கவர்ந்த இந்த மாமனிதருக்கு எனது பிரார்த்தனை. உலக மக்கள் அரங்கில் தைரியத்திற்கு இலக்கணம் வடித்தவர்களில் அமரர் கர்ப்பால் சிங்கும் ஒருவர். அவருக்கு எனது இறுதி மரியாதையைச் சமர்ப்பிக்கின்றேன்.
மக்கள் பணி எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். கர்ப்பால் பற்றி தவறாக பேசுபவன் அவர் பற்றி அறியாதவன். அந்த மாமனிதர் எப்போதும் நம் மனதில் நிலைத்து நிர்ப்பார். அவரது வாரிசுகள் அவர் பெயரை நிச்சயம் காப்பற்றுவார்கள். அவர் தொண்டர்கள் அவர் பணியை தொடர்வார்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்.
இந்த மாமனிதர் எப்போதும் நம் மனதில் நிலைத்து நிர்ப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்.
மாநில அரசுக்கு எங்களின் நன்றி காரணம் சாலைக்கு உயர் திரு: கர்பால் சிங் பெயர் சூட்டியதர்கு இதற்கு ஆட்சிக்குழு முழு ஒப்புதல் தரவேண்டும்.உயர் திரு கர்பால் சிங் இடத்தை நிரப்புவதற்கு அவரின் மகன் பூச்சோங் நாடளமன்ற உறுப்பினர் கோபின் சிங் முன்வரவேண்டும் புலிக்கு பிறந்தது புலியாகத்தான் இருக்கும்.இனி இவர் செல்லு இடம்மேல்லாம் உயர்திரு கர்பால் சிங் போல அதரனும்.
மீண்டும் கவலை உங்களால் எனக்கு !