கர்பாலுக்கு 15,000 க்கு மேற்பட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்

 

karpal - 10,000மலேசியாவின் பெருமைமிக்க மகன் கர்பாலுக்கு மலேசியர்கள் தேவான் ஸ்ரீ பினங்கில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அரச மரியாதையுடனான சடங்கில் கலந்து கொண்டு தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தினர்.

அதன் பின்னர், பிற்பகல் மணி 1.00 அளவில் அவரது உடல் புக்கிட் கந்துங் சீன மின்சுடலை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 17 இல் சாலை விபத்தில் கர்பால் மரணமடைந்த செய்தியால் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள், அவரின் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள், அரசியல் வேறுபாடின்றி பினாங்கு, ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்தில் வரிசை பிடித்து நின்று தங்களுடைய  கடமை உணர்வுமிக்க, அன்பான தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

புக்கிட் குளுகூர் நாடாளுமன்ற உறுப்பினரான கர்பால் கடந்த 40 ஆண்டுகளாக சட்டத்துறையும் அரசியலும் முன்னணி தலைவராக விளங்கினார். அவர் மனைவி குர்மிட் கவுர், ஐந்து பிள்ளைகள் மற்றும் 10 பேரப்பிள்ளைகளை விட்டுச் செல்கிறார்.

 

 

 

TAGS: