கெராக்கான்: அரசமைப்பு கூறுகிறது என்றால் அதை பெர்காசா நிரூபிக்க வேண்டும்

tanஅதிகாரப்பூர்வ  பாரங்களில்  இனம்  பற்றிய  பத்தியை நீக்குவது  அரசமைப்புக்கு  விரோதமானது  என்பதை   பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  நிரூபிக்கத்  தயாரா  என  கெராக்கான்  இளைஞர்  பகுதி  சவால்  விடுத்துள்ளது.

அரசாங்கம்  இனம் பற்றி  வினவும்  பத்தியை  நீக்கினால்  வழக்கு  தொடுக்கப்படும்  என்று  இப்ராகிம்  மிரட்டியிருப்பதற்கு  அதன்  தலைவர்  டான்  கெங்  லியாங்    இவ்வாறு  எதிர்வினை  ஆற்றியுள்ளார்.

“இனம்  பற்றிய  பத்தியை  அகற்றுவது  அரசமைப்புக்குப்  புறம்பானது  என்று  அறிவிப்பதற்குமுன்  பெர்காசா  முறையான  சட்ட  ஆலோசனையைப்  பெறுவது  நல்லது.

“அரசாங்கம்  அதன்  பாரங்களில்  இனம்  பற்றிய  பத்தியை  உள்ளடக்குவதைக்  கட்டாயமாக்கும்  விதிமுறை  எதுவும் அரசமைப்பில்  இல்லை”,  என  டான் ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பாரங்களில்  இனம்  பற்றிய  பத்தியைச்  சேர்ப்பதும்  சேர்க்காததும்  அரசாங்கத்தின்  விருப்பமாகும்.