ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தான் ரக்யாட் பிளவுபடும் என்று ஆருடம் கூறப்படும் வேளையில் பிஎன்னிலும் சிறுசிறு விரிசல்கள் தோன்றியுள்ளன.
எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் முயற்சியாக, அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், ஹுடுட் மீது மசீச அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஹுடுட் விவகாரத்தில் அம்னோ பாஸை ஆதரிப்பதால் பிஎன்னில் இருப்பதா, இல்லையா என்பதை மசீச பரிசீலிக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வீ கா சியோங் கேட்டுக்கொண்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது கைரி இவ்வாறு கூறினார்.
ஹுடுட் விவகாரத்தில் அரசாங்கம் இன்னும் எந்தவொரு முடிவும் செய்யவில்லை என்பதால் யாரும் ஊகத்தின் அடிப்படையில் அறிக்கை விடுதல் கூடாது என்றாரவர்.
hudud சட்டத்தை சொல்லி பூச்சாண்டி காட்டும் பாஸ் கட்சியை விட, அம்னோதான் முன்னிலையில் இருக்கிறது ! mca அறிக்கையால் கைரிக்கு வயிறு கலக்கி விட்டது ! mic இப்படி சொல்லி தொலையும்மா ?
சீனன் mca வை கலைக்க மாட்டான்,அப்படியே ஓட்டை திருப்பி
விடுவான், நம்மவன் அவனை வைத்து கூத்தடிப்பான். கையிலும்,
மூஞ்சியிலும் முத்தம் கொடுப்பான்,கடந்த தேர்தலில் பார்த்தவைகள்.
ஆமாம் கு…..விடுவதேன்றாலும் அம்னோ முதலாளியை கேட்கவேண்டும்.
hudud சட்டத்தை சொல்லி பாஸ் பூச்சாண்டி காட்ட வில்லை ,,பாஸ் சொல்வது உண்மை ,,HUDUD இல்லைன்னா திருடனுக்கு கொண்டாட்டம் ,MUTHALIL HUDUD சட்டம் தமிழனுக்குதான் கொண்டுவர வேண்டும் ,இவனுங்கதான் திருடுரதுலே பலே கில்லாடியாக இருக்கானுங்க
ம இ க ஹுடுட் சட்டத்துக்கு எதிராக அறிக்கை விட வேண்டும் !
கிளந்தானில் ஹுடுட்டைச் செயல்படுத்துவது பற்றி ஆராய கூட்டரசு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டிருகிறது என்றுதான் அம்னோ தலைவர்கள் கூறினார்களே தவிர, யாரும் ஹூடு சட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றனர் என்று சொன்னதே கிடையாது!!!!!! சற்று சிந்தித்தால் அரசியல் சாயல் நன்கு புரியும்….
தமிழர் நந்தா, அம்நோவை எதிர்பதற்கு முக்கியமாக ஆண்மை இருக்கவேண்டும்,அம்நோவை எதிர்த்து நிற்கும் பல பெண்களுக்கிடையில் மஇகாவை ஒப்பிட்டுபார்த்தால் இந்த பெண்களின் ம…ருக்கு கூட ஈடாகமாட்டார்கள்.ஏற்கனவே அம்நோ காரனுங்க சொல்லியிருக்கானுங்க,பாம்பையும் இந்தியனையும் ஒரேசமையத்தில் கண்டால்,முதலில் இந்தியனைதான் அடிக்கவேண்டும் என்று,அது வேறுயாருமில்லை,மஇகாதான். இந்த நரி கூட்டத்தின் கதையை விட்டுவிட்டு,முதலைகளின் கதையை பார்ப்போம்.GST போல் இஷ்ட்டத்திற்கு சட்டத்தை அமுல்படுத்தும் அம்நோவிற்கு.HUDUD சட்டத்தை கொண்டுவர முடியாத? ராஜப்பரம்பரை தவறுசெய்தால் ஹுடுட் தண்டனை வழங்கப்படுமா?
ஹுடுட் சட்டத்தை அமுல் படுத்த அம்னோ ஏன் பாஸ் கட்சியை ஆதரிக்கிறது?பாகதானை உடைக்க வேண்டும் என்பதற்காகவ ?எம் சி எ ,டி எ பி கட்சி போல வேறு எந்த கட்சியாலும் இப்படி சவால் விடமுடியாது அம்நோகார்களிடம் .சபாஸ் டி எ பி,எம் சி எ .
முதலில் ஹுடுட் சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்
என்பது பற்றி யோசித்து கருத்து சொல்வது மேல் !
இது இஸ்லாமிய நாடா ?உண்மையான ஒப்பந்தம் என்ன ?
இதை தானே அமரர் கர்ப்பால் கேள்வி மேல் கேள்வியாக
எழுப்பி கர்ஜித்துக் கொண்டிருந்தார் .
இதற்கு இடமளித்தால் நாளை இன்னொரு இஸ்லாமிய
சட்டம் !!!
பல இன / சமய நாடு என்று உலகம் முழுதும் கேட்க
பூசி மொழுகல் ஏன் ???
இன்னொன்று பல இன கட்சி …தேசிய முன்னணி !!!
எங்கே இருக்கிறது தேசிய முன்னணி !!!
ஆட்சி அதிகாரம் எல்லாம் …ஒரு கட்சியிடம் (அம்னோ )!
மற்றவர்கள் போடும் பிச்சைக்கு கை ஏந்தி நிற்கும்
சுயமரியாதை அற்ற கோழைகள்!
இவர்களா சொந்த சகோதரர்கள் துன்பத்தில்
சாதல் கண்டு போராடுவார்கள் ?
ஏதோ இவருக்கு திடீர் தைரியம் பேசி இருக்கிறார் !
தொடர்ந்து இழந்ததை மீட்க போராடுவாரா ???
அம்னோ அவர்தம் சகாக்களை பேசவிட்டு அவசரபடாம காலாட்டிக் கொண்டிருந்ததால், ம.சி.ச. – வுக்கு வந்தது அவசரம். தே.மு. இருந்தால் என்ன இறந்தால் என்ன?.
ஹுடுத் வந்தால் நஷ்டப் படப்போவது அம்னோ அரசாங்கமே. நடுவண் அரசு கையில் இருக்கும் குற்றவியல் வழக்கு தொடுக்கும் உரிமையை என்றுமே அம்னோ அரசாங்கம் பாஸ் கட்சி ஆளும் மாநிலத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கப் போவதில்லை. ஆதரவு தருகின்றோம் என்று கூறிவிட்டு அதன் பின்னர் ஒரு கூட்டுக் குழு சேர்ந்து ஆராய்வோம் என்ற புது சரக்கை வெளியிட்டதின் நோக்கமே இப்பிரச்சனையை அடுத்த பொது தேர்தல் வரைக்கும் தள்ளிப் போட்டு பாஸ் கட்சிக்கு மக்கள் கூட்டணியுடன் இருக்கும் உறவை முறியடிக்கவே என்று பாஸ் கட்சி புரிஞ்சுகிட்டா சரி. அது இல்லாமல் அம்னோவின் இசைக்கு பாஸ் கட்சி நாட்டியமாடினால் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வுவது நிச்சயம்.
தம்பி மோகன் தமிழன் இல்லை இந்தியன்