முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட் தாம் பதவியிலிருந்த காலத்தில் மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் கொடுத்ததாக கூறினார்.
“என் காலம் முழுவதிலும், அது எப்போதுமே ஒரே ஒரு பெயர்தான். எந்த சுல்தானுடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததே இல்லை”, என்று மகாதீரிடம் ஆட்சியாளர்கள் அவரிடம் எப்போதாவது கூடுதல் பெயர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டதுண்டா என்று வினவப்பட்ட போது கூறினார்.
தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் மாநில எம்பி “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்றும் அவர் கூறினார்.
“யாரோ ஒருவரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளப் போகும் ஒருவரை நியமிக்க விரும்புகிறீர்களா? என்று வினவிய மகாதீர், தமது எதிர்ப்புக்கும் டாக்டர் வான் அஸிசாவின் பால் பற்றியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
“பெண்களுடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எனது மனைவியும் கூட ஒரு பெண்தான்”, என்று குறும்பாக கூறினார்.
யாரை நியமிக்க வேண்டும் என்பது சுல்தானைப் பொறுத்தது. ஆனால், நியமிக்கப்பட்டவருக்கு பெரும்பான்மை இல்லை என்றால், அந்த நபர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வழி வெளியேற்றப்படலாம் என்று விவரித்த அவர், “அதுதான் நமது அமைவுமுறை”, என்றார்.
சர்வதிகார ஆட்சியில் இதெல்லாம் முடியும்.
அதனால் வான் அசிசா வேண்டும் என்கிறாரா,வேண்டாம்
என்கிறாரா ?
பசுத்தோல் போர்த்திய புலிகள் பற்றி அறிந்ததில்லையா ???
சுதந்திரம் பெற்று 57 ஆண்டுகள் என்கிறார்கள் …,ஆனால்;இந்த
நாட்டின் மக்கள் செய்த மாபெரும் தவறு ,ஒரே ஆட்சியை 57
ஆண்டுகள் தலையில் தூக்கி கொண்டாடிய பயனை, அவர்களின்
பேரன் /பேத்திகள்;அந்த தவறின் பயனை, அனுபவித்து நொந்து
கொள்வதை அவர்கள் காண வேண்டாமா ???
துரோகிகள் கையறு நிலையில் கண்ணீர் வடிக்கும் காலம் வரவேண்டும் !!!பொய்யான சுதந்திரம் பேசுவது மடமை !!!
பொய்யான ஒரே மலேசியா கதைகள் வேண்டாம் !!!
மகாதிரை கண்டு எல்லோரும் பயந்தார்கள் !
பெரும்பான்மை ஆதரவோடு வான் ஆசிசா பெயர் முன் மொழியப் பட்டும் சுல்தான் ஏற்க்க வில்லையே..? இது என்ன அரசியல் விளையாட்டு துன் நீங்க சொல்லுங்க..?
வேண்டாத மருமகள் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம். 57 ஆண்டுகாலம் உறிஞ்சி உறிஞ்சி சுவைத்தவன் சும்மா போவானா???? சக்கையைகூட விட்டுவைக்கமாட்டான்.
The motive of story,athavathu mahathir yenna sollavarugiraar,yitthu aran manai ninthanai aagaatho,waalga naaraayana naamam.
உறிஞ்சி உறிஞ்சி சுவைக்க இன்னொருவன் முயற்சி செய்கிறான்..பாவம்..அவனும் முன்னாள் அம்னோ காரன்தான்.
இதிலிருந்தே தெரிய வில்லையா? இந்நாட்டில் என்ன நடக்கின்றது என்று? காகாதிர் இரும்பு கரத்துடன் எல்லாரையும் கம்பி என்ன வைத்தான் -எல்லாரும் பயந்து அவன் என்ன செய்தாலும் ஜால்றாக்களுடன் சேர்ந்து தலை ஆட்டினர். ஜோகூர் சுல்தானுடன் மோதி சுல்தான்களின் அதிகாரத்தையே கேள்விக்குரியாக்கினான் -அப்போது அவன் செய்ததை யாருக்கும் கேட்க தைரியமில்லை.
“தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் மாநில எம்பி” ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று கூறும் மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி அவரது ஆட்சியில் நடந்தது பற்றியும் நினைவு கூர்வோம்.
UMNO -வை “PARTI HARAM ” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபொது, அவசரமாக அப்போதைய ” MCA ” தலைவரை தற்காலிமாக
(5 நாட்கள்) “இடைக்கால பிரதமர்” பதவியில் அமர்த்தி, தூரத்திலிருந்து “இடைக்கால பிரதமரை” தாங்கள் கட்டுப்பாட்டில் வைதிருக்கவில்லையா ???
உங்களுடைய ஆட்சியை காப்பாற்றி கொள்ள இஸ்லாம் அல்லாதவர் நாட்டின் உயர் பதவியான “பிரதமர்” பதவியில் அமர்த்தலாம், மற்றவர்களுக்கு என்றால் குறிப்பாக எதிர்கட்சிகளுக்கு என்றால் “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்று கூறுகிறீர்கள்.
உங்களுடைய ஆட்சியில் நடைபெற்ற இன்னும் சில விவகாரங்களை, துல்லியமாக ஆய்வு செய்தோமானால், உங்களது ஆட்சி காலத்தில், மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி கெட்டிக்காரரா ? அல்லது உங்களது ஆணைக்கு அடிபணிந்து கைகட்டி வாய்பொத்தி சேவகம் பார்த்த மலாய்காரர்கள் கெட்டிகாரர்களா ? என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
இவன் மாமா அல்ல காகா-திர்
உங்கள் காலத்தில் நீங்களே பிரதமர்,நீதிபதி,நிதி அமைச்சர் இப்படி எல்லா அமைச்சுகளும் தங்கள் காலடியில் தானே இருந்தது. உங்களை எதிர்க்க நினைத்தவர்களை ஒரு “வழி” பண்ணிவிடுவீர்கள் என்பதும் அநேகருக்கு தெரியும். மக்களை பூமிபுத்ரா,பூமி புத்ரா அல்லாத்தவர்கள் என்று “கூறு” போட்டவரும் நீர் தானய்யா!
ஒரு பெயரை மட்டும்தான் கொடுத்தேன், பிரச்சனையே இல்லை, மகாதிர் ! ஜோகூர் சுல்தான் கண்ணுல விரல் விட்டு ஆட்டிய ஆளாச்சே நீங்க !
shanti umno கரன் உங்கலுகு எவ்ளவு குட்தான்…….RM
eq போன்றவர்களை மனித உருவத்தில் படைத்தது கடவுளின் தவறாகும் .
இவன் தலைகிழாக பேசினால் என்னமோ விசியம் இருக்கு ?
உன் சாம்ப்ரஜியம் அழியும் நாள் வெகு தூரமில்லை! அதையும் பார்க்க தானே போகிறாய்…
மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டியை என்ன விமர்சனம் செய்தாலும், இவரது துணிச்சலை நாம் பாராட்டியேஆகணும். ஏனென்றால்,
மலாய்க்காரர்களை “MELAYU MALAS” மற்றும் “MELAYU MALU TAADA” (MELAYU TAK MALU அல்ல) என்று மலாய்க்காரர்கள் முன்னிலையிலே குறைகூறும் இவரைபோல் துணிச்சல் உள்ளவர்கள் இந்நாட்டில் இல்லை.
நக்கல் நாரதர், உங்கள் கருத்து நச் நு இருந்தது..
மகாதிரின் சாதனை அளவிட முடியாதது ! அவரின் சுய சரிதையை படியுங்கள் ! அவர் மலாய்காரர்களுக்கு செய்த தொண்டு அளப்பரியது ! 60 % மலாய்காரர்களுக்கு , அவர் செய்த பரிணாம மற்றம் , 20 வருடத்தில், உலகையே திரும்பி பார்க்க வைத்தது ! ஆனால் மகாதிர் இந்தியர்களுக்கு செய்த ஆணைதையும் திருடியது ம இ கா வை ஆண்ட சாமீ வேலு தான் !!
dhilip2 சொல்வது சரியே.