கிளந்தான் மாநில சட்டமன்ற தொகுதி பெங்காலான் குபுர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டி பின் மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலானது என்றாலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்குவார் என்பதால் இது ஒரு மும்முனைப் போட்டியாக மாறுகிறது.
பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராகிம் போட்டியிருகிறார். மாட் ராஸி மாட் அலி பிஎன்னை பிரதிநிதிக்கிறார். சுயேட்சையாக இஸால் புகாரி இஸ்மாயில் புகாரி போட்டியிடுகிறார்.
இன்று காலை மணி 10.00 அளவில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டும்.
வாக்களிப்பு செப்டெம்பர் 25 இல் நடைபெறும்
தற்போது பெரும்பாலும் அரை வேக்காட்டு தலைவர்களை கொண்டு செயல்படும் பக்காத்தான், கீழ்நோக்கி போய்க் கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. காஜாங் இடைத்தேர்தலில், பொதுத்தேர்தலில் பெற்றதைவிட குறைவான பெரும்பான்மையில் PKR வெற்றிபெற்றது. ஏழாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற தெலுக் இந்தான் தொகுதியை, இடைத்தேர்தலில் கோட்டை விட்டு வீடு வந்து சேர்ந்தது DAP . பொதுத்தேர்தலில் 1,736 வாக்குகளில் அம்னோ பெங்காளான் குபுரில் வென்றது. இம்முறை 2,000 முதல் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் PAS கட்சி மண்ணைக் கவ்வப் போகிறது. தங்கள் பிழைகளை பக்காத்தான் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தேர்தலில் மேலும் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். பெங்காளான் குபுரில் அம்னோவுக்கு 10,000, பாஸ் கட்சிக்கு 7,000, சுயேட்சைக்கு 100.
ஹாடிக்கு ஒரு kubur நாங்கள் செலங்கோரில் தயார்படுத்தி உள்ளோம் அவன் இங்கே வந்தால் அப்புறம் பாருங்கள் விளையாட்டை
பெங்கலான் குபூர் மக்கள், சுவேச்சை வாக்காளருக்கு வாக்கு அளித்து bn ,pas பாடம் புகட்ட வேண்டும் ! சுவேச்சை வாக்காளர் கட்சி மாறாமல் இருந்தால் சரி !