காலிட்டுக்கு ஹாடியின் உறுதியான ஆதரவு கவலையளிக்கிறது

 

Pas - hadi rappedபிகேஆரின் ஆதரவை இழந்து நிற்கும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பதில் பாஸ் தலைவர் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்திற்கு ஒரு தீர்வு பற்றி ஹாடியின் கருத்தைக் கேட்ட போது காலிட்டை தொடர்ந்து பதவியில் நிலைநிறுத்துவதுதான் தீர்வு என்று ஹாடி கூறியதோடுHadi for Khalid-Nik Nazmi அவரிடம் காணப்படும் பலவீனங்களை தாமே நேரில் கண்காணிக்கப் போவதாகவும் அவர் கூறினார் என்று நிக் நாஸ்மி இன்று வெளியிட்ட் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

காலிட்டுக்கு ஹாடியின் எல்லைவரையற்ற ஆதரவு நேற்று பாஸ் தலைவருடன் இதர பக்கத்தான் இளைஞர் பிரிவு தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் போது வெளியாயிற்று.

ஹாடியின் முடிவு பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை அடுத்த மந்திரி புசாராக நியமிக்க அளிக்கப்பட்ட பெரும்பான்மை ஆதரவுக்கு எதிராக இருக்கிறது என்று நிக் நாஸ்மி கூறினார்.