நேற்றிரவு இந்தியா, ஹைதராபாத்துக்கு இங்கிருந்து கிளம்பிய மாஸ் பயணம் எம்எச்198 ஏதோ கோளாறு காரணமாக திரும்பி வந்து விட்டது. அந்த விமானத்தில் தீ பற்றியதால்தான் விமானம் திரும்பி வர நேரிட்டது என்ற வதந்தியை மலேசியன் ஏர்லைன்ஸ் (மாஸ்) நிராகரித்துள்ளது.
இன்று காலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் விமானம் திரும்பியதற்கு “தானியங்கி-பைலெட்டில் ஏற்பட்ட ஒரு கோளாறுதான் காரணம்” என்று மாஸ் கூறுகிறது.
“விமானத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது என்று சோசியல் மீடியாவில் வலம் வரும் கூற்றுகள் உண்மையல்ல”, என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அக்குறைபாடு விமானம் அல்லது பயணிகளின் பாதுகாப்பிற்கு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் பயணத்திற்கு பொறுப்பான கேப்டன் திரும்பிவிட முடிவெடுத்தார்”, என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மலேசியா தமிழ் மக்களே AIR ஆசியாவை பயன்படுத்தி உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள் நஜிப் அடுத்து அவனை எதிர்க்கும் ஒவ்வொரு pakatan உறுப்பினரையும் விமானத்தின் மூலம் அழிக்க கங்கணம் கட்தி உள்ளான் என்று PAS உறுப்பினர் ஒருவர் தகவல் விரிவான விளக்கத்துடன் ஹரகவில் உள்ளது
MAS விமானத்தில் பயணம் செய்வது என்பது “தற்கொலைக்கு சமம்” என்று பயணிகள் உணர வேண்டிய நேரம் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
எச்சரிக்கை MAS விமானத்தில் பயணம் !!!!!!!!!!!!!!!!
மாஸ் விமானங்களில் பயணம் செய்வோரைப் பற்றி யாரும் கவலைக் கொள்ளவேண்டாம். அவர்கள், தஞ்சோங் ரம்புத்தான் அல்லது தம்போய் வாசிகளாக இருக்கக்கூடும்.
மாஸ் நிறுவனம் மலாய்காரன் கையில் இருக்கும் வரை அது தேறாது !
MAS இழுத்து மூடுங்க்கப்பா.