கடுமையான குறைகூறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்ற தமது சர்சைக்குள்ளாகியிருக்கும் கருத்தை மகாதீர் இன்று தற்காத்து பேசியுள்ளார்.
“என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. சோம்பேறி என்றால், சோம்பேறி என்று கூறுவேன்.
“மக்கள் விரும்பவில்லை என்றால், நல்லது, அது பற்றிக் கவலையில்லை. நான் அம்னோ தலைவராக இருந்த போது கூட நான் எப்போதும் திட்டிக் கொண்டுதான் இருந்தேன்”, என்று இன்று மிங்குவான் மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ள நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணைலில், வாசிக்க வேண்டியது மற்றும் கடுமையாக உழைக்க வேண்டியது ஆகியவற்றின் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்கள் கடுமையாக உழைக்கவில்லை என்று அவர் கருதுகிறா என்ற கேள்விக்கு, அந்த முன்னாள் பிரதமர் உள்ளூர் பல்கலைக்கழகங்களை எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
“நாம் பல்கலைக்கழகத்திற்கு சென்றால், 70 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் எங்கே? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மாட் ரெம்பிட் ஆகிவிடுகிறார்கள்.
“அதனால்தான் (அவர்கள்) கடுமையாக உழைப்பதில்லை என்கிறேன். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும், முறையாக கற்பதில்லை”, என்றாரவர்.
மற்ற இனத்தினரின் தரத்தை அடைய மலாய் சமூகம் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
அவர் தமது “ரொட்டி பாய்” கதையை மீண்டும் கூறினார்.
“நான் இப்போது ரொட்டி கடைகளை வைத்திருக்கிறேன். நான் தெளிவாகக் கூறுகிறேன். நான் வெட்கப்படுகிறேன், ஏனென்றால் மலாய், சீன, மியன்மார் மற்றும் இதர தொழிலாளர்களுக்கிடையில்…மலாய்க்கார தொழிலாளர்கள் பணத்தைக் கண்டால், அவர்கள் (எல்லாவற்றையும்) மறந்து விட்டு நாணயமில்லாதவர்களாகி விடுகின்றனர்”, என்று மகாதீர் அப்பட்டமாகக் கூறினார்.
ஒரு சம்பவத்தில், அவரது மேனேஜர் இதர தொழிலாளர்களுடன் சேர்ந்து பணத்தை உறிஞ்ச திட்டமிட்டார். ஆனால் அது இன்னொரு தொழிலாளரால் தடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“இம்மாதிரியான மனப்பாங்கை கொண்டிருப்பதின் காரணத்தால் நான் பல மலாய்க்காரர்களை நீக்க வேண்டியதாயிற்று”, என்றாரவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மகாதீர் மலாய்க்காரர்கள் பற்றி கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து அவர் சமீப காலமாக இது போன்றவற்றையே கூறிக்கொண்டிருக்கிறார் என்று பலர் கூறுகின்றனர்.
அன்று மலாய்க்காரர்கள் உழைத்து கொண்டுதான் இருந்தார்கள், ஆனால் இன்று மலாய்க்காரர்கள் சோம்பேறிகளாய் ஆனதற்கு காரணமே இந்த மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி,மலாய்க்காரர்களின் அரசியல் ஆதரவுக்காக மலாய்க்காரர்களுக்கு “இனாமாக கொடுத்தல்” என்ற கொள்கையே என்பதனையும் மறுக்க முடியாது.
இதற்க்கு காரணம் யார் ? தலைவன் யார்? நீயே ! அளிபாபாக்களை உருவாக்கியதும் நீயே! பதவியில் நீடிக்க மலாய் காரர்களை சோம்பேறிகளாய் மாற்றியதே நீதான் ! கல்வி என்றால் போட்டிபோட்டு தேர்ச்சி பெறவேண்டும் , மலாய் மாணவர்களுக்கு தனி சலுகை ? அரசாங்க வேளைகளில் திறமைசாலிகளுக்கு முன் உரிமை இல்லாமல் இனம்பார்த்து வேலைவாய்பு ? அந்த சலுகை, இந்த சலுகை என்று மலாஇகாரர்கலை அடி முட்டாளாக்கி சோம்பலை வரவழைத்ததே நீதான்? 30-40ஆண்டுகலுக்கு முன் நிறுத்தப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட ஆங்கில மொழி மீண்டும் தொடங்க காரணமென்ன ? அரசாங்கத்தில் முட்டாளான
போக்கும் சோம்பேறிகளின் ஆட்சிதானே காரணம்? பிறகு ஏன் மற்றவர்களை குறை கூறுகிறீர்கள் , சோம்பேறிகளா ????
இபொழுது … இவரின் இந்திய ரத்தம் வேலை செய்கிறது போலும் !!!
இப்பொழுது பெர்காச வாயை முடிக் கொண்டிருக் கிறானே. மற்றவர்கள் இப்படி சொன்னால் சட்டம் பையும்.
மகாதிர் எப்பொழுது குண்டை எங்கே போட்டால் அது வெடிக்கும் என்று நன்கு கற்று வைத்துள்ளார். அதனால்தான் இப்பொழுது மக்களின் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் மீண்டும் ஒரு வெடிகுண்டைப் போடுகின்றார். பட்ஜெட் வரும் வேளையில் இப்படி ஒரு வெடிகுண்டைப் போட்டு, தம்மின மக்களின் மேம்பாட்டிற்கு மென்மேலும் அரசாங்கச் சலுகைகளை பெறுவதற்கு இது ஒரு முன்னோட்டமே. மலாய்க்காரர்கள் இன்னும் முன்னேறவில்லை அவர்களுக்கு எதிர்வரும் பட்ஜெட்டில் மேலும் பல சலுகைகள் கொடுத்து அவர்களை வாழவைக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றாரோ?. அதில் ‘ரொட்டி பாய்’ கடை வியாபார உரிமையையும் (franchise’) தம்மக்களுக்கு வழங்க அரசாங்க சலுகைகள் கேட்டாலும் கேட்பார். யாம் அறியோம் பாரபரமே!.
நீங்கள் உங்கள் நிறுவனத்திலிருந்து மலாய்க்காரர்களை நீக்குவது எளிது. யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். மற்ற இனத்தவர்களின் நிறுவனங்களில் இது முடியுமா? ஒரு சோம்பேறி அம்னோகாரன் கூட கேள்வி கேட்பான். அவனுக்கு வக்காளத்து வாங்க மந்திரி பெசார் வரை போவான். யாராலும் ஒன்றும் செய்ய முடியாதே!
ஐயா மகாதீரர் அவர்களே, இவர்களை சோம்பேறிகளாகவும். முட்____ களாகவும், மடை____ யர்களாகவும் ஆக்கியது யார்? நீர் தானே? பந்தயத்தில் ஓடாமலேயே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதல் பரிசைத் தூக்கிக் கொடுப்பதைப்போல் ஒரு ஏ, 2 ஏ பெற்றவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு 15ஏ எடுத்த எம் இன மாணவர்களுக்கு ‘அல்வா’. இது எந்த வகையில் சேர்த்தி? பிற இனத்தவருக்கும் உரிய பங்கையும் கொடுத்துப் பாரும். அப்பத்தான் உம் இனமும் போட்டியிட்டு வெற்றிபெற கற்றுக்கொள்ளும். வியர்வை சிந்தி உழைக்கக் கற்றுகொள்ளும். ஆனால் இதைச் செய்யமாட்டீர்கள். அவர்கள் சோமாறிகளாகவே இருக்க வேண்டும் என்பது உங்க கட்சி ஆட்சியின் ஆசை அல்லவா?
மகாதிமிர் அவர்களே! மலாய்க்காரர்களும் சுறுசுறுப்புடன் திகழவேண்டுமா? வெகு வெகு சுலபம். தற்போதைய உயர்மட்ட பதவிகள், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க குத்தகையாளர்கள், அரசு வேலைகள் அனைத்திலும் மலாய்க்காரர்களே. இதனை மாற்றி அவ்விடங்களுக்கு மலாய்க்காரர் அல்லாதோரை புகுத்திவிடுங்கள். பிறகு பாருங்களேன்! ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், சோம்பேறியான நீங்கள், வெளிநாடுகளில் 45 பில்லியன் மதிக்கத்தக்க சொத்துக்களை சேர்த்து விட்டீரே, எப்படி?
மீண்டும் ஏதோ ஒரு நாச திட்டம் தீட்டுகிறார் போலும் ! நீ நடத்து ராசா !
உன் ஆட்சியில் மலாய்க்காரர்களை மடியில் உட்காரவைத்து ஊட்டிவிட்டு சோம்பேறிகளாய் ஆக்கிவிட்டாய் இப்பொழுது அடம்பிடிக்கிறார்கள் ????
கடந்த சில தினங்களாக,மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி வெளியிடும் அறிக்கைகளை கூர்ந்து கவனித்தீர்களேயானால்,
அவர் வெளியிடும் கருத்துக்கு, அவருக்கு எதிராக “உள்துறை அமைச்சு” நடவடிக்கை எடுக்காதா ? என்று காத்திருப்பதுபோல் தெரிகிறது. அப்படி “உள்துறை அமைச்சு”அவர் மீது நடவடிக்கை எடுக்க துவங்கினால், அதுதான் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம்.
மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டியின் இந்த சதுரங்க ஆட்டத்தில் எத்தனை UMNO தலைவர்களின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரபோகிறது என்பதுதான் இந்த ஆட்டத்தின் கிளைமாக்ஸ் !!!
இதில் என்ன ஆச்சரியம்? இது தெரிந்து தானே வெள்ளைக்காரன் நம்மவர்களை அதிகமாக இங்கு கொண்டுவந்தான். என்னமோ பெரிய உண்மையை சொல்லியதுபோல் அலட்டிகொள்கிரான்கள். என்ன நாம் எது சொன்னாலும் அது திருத்தி வேறு விதமாக அவனகளுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வான் கள்
எமது தலைவன் நஜிப் பணம் சேர்ப்பதில் கில்லாடி சோம்பேறின்னு சொல்லாதீங்க மாமாக மகாதிர்
மன்னிக்கவும். துன் மகாதீர் தயவு செய்து உமது வாயை மூடும். எங்கள் அனைவருக்கும் நிறைய வேலைகள் உள்ளன. உமது வீணாய்போன சொற்களால் எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்காதே.