அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீடு விசாரணை இன்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீராம் கோபால் தலைமை ஏற்றுள்ளார்.
தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும் சங்கீதா ஆகியோர் சமர்ப்பிப்பர் என்று தற்காப்பு வழக்குரைஞர் லத்தீபா கோயா கூறினார்.
தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமையில் விசாரணை இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
பெடரல் நீதிமன்ற ஐவர் அமர்விடம் ஸ்ரீராம் கோபால் தமது தரப்பினரை அறிமுகம் செய்து வைக்கிறார்.
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டான் கீ கவோங், டிஎபி தலைவரும் செராஸ் எம்பியுமான டான் கோக் வாய் ஆகியோர் அங்கு காணப்பட்டனர்.
அன்வார் தற்காப்பு குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த சுலைமான் அப்துல்லா உடல்நலக்குறைவால் தமது பணியைத் தொடரமுடியவில்லை.
நம்பிக்கை இருக்கிறதா என்று வினவியதற்கு, “முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி எங்களுடன் இருக்கிறார் (தலைமை தற்காப்பு வழக்குரைஞராக). நான் மனநிலையில் தயாராக இருக்கிறேன். ஆனால், பெரும் நம்பிக்கை இல்லை”,என்று அன்வார் கூறினார்.
அரசு தரப்பில்தலைமை வழக்குரைஞர் சாபி அப்துல்லா வழக்கை நடத்துகிறார்.
என்று காகாதிர் பிரதமன் ஆனானோ அன்றே நீதிக்கும் நியாயத்திற்கும் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.- அன்று அன்வார் காகாதிருக்கு துணை போய் இருக்ககூடாது. இன்று அதன் பயன்– சிறைச்சாலை.
பெடெரல் நீதிமன்றத்தில் முதிர்ந்த 5 நீதிபதிகள் அன்வாரின் வழக்கு பிரதிவாதி வழக்கு அறிஞர்கள்.அரிஞர்கள் பாவம்…இதில் தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும் சங்கீதா ஆகியோர் சமர்ப்பிப்பர் என்று தற்காப்பு வழக்குரைஞர் லத்தீபா கோயா கூறினார்? ஏதும் விளங்குதா என்று சொல்லுங்க?
PKR அரசியல் சட்ட நிபுணர்கள் சிவராசா /மணிவண்ணன் /இன்னும் பலர் கவனிப்பு குழுவில் இருக்கலாம். எனாகு தெரிந்து கர்பாளுக்கு பிறகு மஞ்சித் சிங் நல்ல விவேகமான தலை சிறந்த பெடெரல் வழக்கறிஞர்! நமக்கு இப்போது தற்காப்பு சாமானியர்கள் மீது பயம் வந்து விட்டது.
நீதி எந்த வழியிலும் வலைக்கப்படலாம். இது புதிது அல்ல. எல்லாம் அம்னோவின் (அவன்?) செயல்.