பக்காத்தான் ரக்யாட் கட்சிகளுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா கூறியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் பக்கத்தான் தலைவர்கள் சந்திக்கவே இல்லை என்பதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்கூட்டணி நிலைத்திருப்பதே சந்தேகம் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது வான் அசிசா இவ்வாறு கூறினார்.
“பக்கத்தான் அடிக்கடி கூடிப் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒருவேளை பாஸை நினைத்து இவ்வாறு சொல்லப்படுகிறது போலும்.
பிகேஆர், டிஏபி-க்குமிடையிலும் பாஸுடனும்கூட தலைவர் நிலைக்கு அடுத்த நிலைகளில் தொடர்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்”, என்று வான் அசிசா குறிப்பிட்டார்.
DAP யிலும் சில ஜடங்கள் உள்ளன puchong பகுதியில் 3 ன்று வருடங்கள் ஆகியும் ஒரு சாதாரண பிரச்சனையை தீர்க்க முடியவில்லை ???????????????
SAMUNDI , DAP எந்த தொகுதியில்தான் ஒழுங்காக வேலை செய்தது, puchong கில் வேலை செய்ய? கண்ணை மூடிக்கொண்டு ராக்கெட் சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் சீனர்கள். அதனால்தான் சீனர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் DAP சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு ஜெயிக்கலாம்.
இறுதியில் பகாதான் தோல்வியிலே தான் முடியும்
பதவி ஆசை கடலில் முழ்கும் பாக்கத்தான் உறவை மேம்படுத்த ஒருகாலும் முடியாது,
PKR ருக்கு ஒரு தமிழன் /இந்தியன் கூட கண்ணுக்கு தெரியவில்லயா ? மாநில நியமனங்கள் மற்ற நியமனங்களில் எங்காளுமுட்டைதானா?
கெஅடிலான் நீதிக்கு ஒரு அசிங்கம். இந்தியர்கள் கொடிபிடிக்கவும் துணி தூக்கவும்தான் லைக்கி என்று நீயும் பட்டை நாமம் போட்டுளாய் ? இந்த சேவியருக்காவது சிலாங்கூர் மாநிலத்தில் துணை தலைவர் பதவி தந்து இருக்கலாம். சேவியர் ,சிவராசா ,மணிவண்ணன், சுரேந்திரன் , சுரேஷ்குமார் , மணிக்கா , PD ரவி, செல்வகுமார், முரளி , தமிழரசன். ராதாக்ருஷ்ணன் , எல்லாம் எந்த மெத்தையில் தூங்குகிறார்கள்? தகுதி , தரம், வீரமெல்லாம் இந்த தமிழன்கிட்டாதானா ? கட்சியில் பதவிகளுக்கு பட்ட நாமம்?சுய பதவி அந்தஸ்து அஸ்தி எல்லாம் கையாடிகளுக்கு கை காசா ?
LIM வேற அடுத்த தேர்தலுக்கு பாகாதான் வேகாது என்கிறார்! தூங்கும் நரிகள் கோழி பிடிக்காது இது அரசியல் வாதிகளுக்க் சொன்ன செரியான குத்தல்.பிறகு குத்துதே குடையுதே என்று விறைப்பு காட்டுவது யாரை ஊ ஓட்டுவது?
இதுக்குதான் சொன்னேன் பாக்காதான் உச்ச மன்றத்தில் ஒருத்தராவது இருக்கணும் என்று எந்த மர மண்டைக்கும் ஏற மாட்டுண்ணுது?
இன அரசியல் நடத்துங்க என்று பாடா படிச்சேன் “oh multiracial மயிரு” என்று புத்தி சொல்றானுங்கா? சமுதாயத்தை ஏச்சி ஊமைகளா வாயில பூதிங் வெச்சிக்கவா இவர்களுக்கு PRU ல ஓட்டு? வீட்டுல்ல மூட்ட பூச்சிய புடிக்க மாடாதவனுங்க எல்லாம் அடுப்படிக்கு போனா சமுதாயம் உருப்படும்.
சாமுண்டி, சிங்கம்…உங்க பகுதியில் என்ன பிரச்சினை? DAP. ஓர் அரசியல் கட்சி. அது சிலாங்கூர் அரசில் அங்கம் வகிக்கிறது. எனவே, அரசியல் கட்சி தான் உங்க பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றில்லை. தற்போதைய மாநில அரசு செவ்வனே தன் பணியை செய்கிறது என்பது என் அனுபவம். எனவே, உங்க பிரச்சினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஷா அலம் என்றால் MPSA. Sugang. Jaya. என்றால் MBSJ. Petaling. என்றால் MPPJ. என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுங்கள். அங்கே உரிய பாரத்தை பூர்த்தி செய்து அதில் ஒரு காப்பியை acknowledge. செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு பதில் தருவார்கள் அல்லது பிரச்சினையை களைவார்கள். வெறும் பதில் மட்டும் அல்லது Dukacita. உங்க பிரச்சினயைத் தீர்க்க முடியாது என்று அவர்கள் பதில் தந்தால் பத்திரிக்கை இருக்கிறது, சமூக வலைதளங்கள் உள்ளன. எங்கள் பகுதியிலும் (இது ஒரு கம்பம்) சாலை வசதி இல்லை. பிரதான சாலையில் சாலை விளக்கு இல்லை என்பது போன்ற பல பிரச்சினைகள். உம்நோவும் தீர்க்க முன்வரவில்லை. JKKK. யும் கையை விரித்து விட்டது. காரணம் அங்கே பிரச்சினையை எதிர்நோக்கியது இந்தியர்கள்..! பிறகு ஒருவாறாக, MBSA. சென்று பிரச்சினையை எடுத்துச் சொல்லி சம்மந்தப்பட்ட பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். மேலும் கீழும் பார்த்தார்கள். நாங்களும் நிலவரி, வீட்டு வரி கட்டுகிறோம். எங்களின் பிரச்சினைகளை தீர்க்க உங்களுக்கு கடமை இருக்கிறது என்று வாதிட்டோம் அதன் பின் 6 மாதங்களுக்குள் சாலை வசதி அதில் சாலை மின்விளக்கு எல்லாம் கிடைத்தன. அந்த சாலை விளக்குகளும் இலவசம். நாங்கள் அதற்கு மின்கட்டணம் செலுத்துவது இல்லை. 18 ஆண்டுகால பிரச்சினைத் தீர்ந்தது. அது மட்டும் அல்ல. மின்விளக்கு கோளாறு என்றால் மின் அஞ்சல் மூலம் தெரிவித்தால் போதும் – அதிக பட்சம் 3 நாளில் சரிசெய்து விடுவார்கள். நீங்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றிப் பார்த்தால் என்ன. DAP-யை நீங்கள் குறை சொன்னதால் இதை நான் எழுத வில்லை, மாறாக, உங்க பகுதியில் உள்ள பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி இருப்பதைச் சொன்னேன், அவ்வளவுதான் . முயலுங்கள் – முயற்சி தான் வெற்றி தரும். அழுத்த பிள்ளைக்குத்தான் உணவும் கிடைக்கும்..!
ரஜனி ரசிகன் அவர்களே! உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி. கேமரன் மலை அழிகிறதே என கடந்த முப்பது ஆண்டுகளாக DAPசிம்மாதிரி போய் கத்தாத அலுவலகமில்லை, செய்யாத போலீஸ் ரிப்போட் இல்லை, கொடுக்காத பத்திரிகை செய்திகள் இல்லை. ஆனால் ஒரு பயலாவது அக்கறை கொண்டானா? இன்று வெள்ளம் வந்து கரையோரமெல்லாம் மூழ்கி, பல பேர் சுடுகாட்டுக்கு போனபிறகுதான் நடவடிக்கை ஆரம்பம்.