புதுடெல்லி: 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டலில் தான் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தாகவும் அதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் நாம் செய்யும் வேலையைக் கெளரவமாக கருத வேண்டும் என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்மிருதி இரானி இவ்வாறு கூறினார்.
திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். எனவே எந்தத் திறமையாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். ஒருவர் மெக்கானிக்காக இருக்கலாம் அல்லது பிளம்பராக இருக்கலாம். அதற்காக அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது.
மெக்கானிக்காக இருப்பதிலோ, பிளம்பராக இருப்பதிலோ அல்லது கார்பென்டராக இருப்பதிலோ எந்த அவமானமும் கிடையாது என்று கூறினார். இப்பொழுது ஒரு அமைச்சராக இருக்கும் தான் 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலை செய்ததாகவும் அதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நாடு வாய்ப்புகளைத் தேடுவோருக்கு சொர்க்கபுரியாகும் என்றும் இந்த நாட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் அவர் கூறினார்.
-http://www.dinakaran.com
மிகவும் பாராட்ட கூடிய விஷயம். நம்மவர்களுக்கு வறட்டு கௌரவம் அதிகம்– மேற்கத்திய நாடுகளில் இது பெரிய விசயமே இல்லை.
எந்த தொழில் செய்தாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்தாலே சிறப்பு தானே அம்மா…!
சபாஷ் .
எதையும் நேர்மையுடன் செய்தால் எப்படியும் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவருக்கு வாழ்த்துகள்.