பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறிய கருத்தும்,…
தனது அதிகாரப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவிக்கும் என்றும், காஷ்மீர் விவகாரத்தை இருநாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்வர் என்றும் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அக்டோபர் 8-9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்ற…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல் கொலை நாட்டின் பெயரை…
’கும்பல்கொலை’ என்பது இந்தியாவுக்கு அன்னியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் தலைவர் மோகன் பாகவத். தசராவை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், சில வன்முறை சம்பவங்களை கும்பல் கொலை என்று கூறி…
தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கடுமை காட்டும் சந்திரசேகர…
தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களில் 50,000 பேரில் சுமார் 1,200 பேர் சனிக்கிழமையன்று போராட்டத்தை விடுத்து பணியில் சேர்ந்தனர். இதன் மூலம் மீதியுள்ள 48,800 பேர் பணி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் என்னென்ன? போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க…
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம்!
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக் கொண்டது. மேலும்…
காஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா பேச்சுக்கு இந்தியா கடும்…
காஷ்மீர் இந்தியாவால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பேசியதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது. இருநாடுகள் இடையே இருக்கும் நட்புறவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக…
தமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன் தேனீர்’ வேண்டுமா? மென்…
அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற…
ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் –…
ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350 கோடி இந்திய ரூபாயாகும். எழுபது ஆண்டு காலமாக நிலவிய இந்தப் பிரச்சனையில், லண்டன் நீதிமன்றம் நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக…
அமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி பேச்சு: “ஒவ்வோர் ஊடுருவல்காரரும்…
சமீபத்தில் அஸ்ஸாமில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை (என்.ஆர்.சி.) மேற்கு வங்க மாநிலத்திலும் அமல்படுத்தி, அந்த மாநிலத்தில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றப்போவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா,…
நரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது தமிழகத்தில் கால் பதிக்கும்…
தொடர்ந்து தமிழின் பெருமையைப் பேசுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, தாம் உலக அரங்கில் அப்படிப் பேசியது குறித்து ஐ.ஐ.டி. விழாவில்…
கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி? முதல் இரண்டு கட்ட ஆய்வுகள்…
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த இடத்தை முதன்முதலில் கண்டுபிடித்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உடன் கீழடி குறித்தும் அங்கு அவர் நடத்திய ஆய்வுகள், கிடைத்த பொருட்கள் குறித்தும் பேசினார் பிபிசியின்…
தமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம் இடம் – நிடி…
நிடி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கிறது தினமணி செய்தி. அதே வேளையில் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும்…
தமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர மோதி சென்னையில் பேச்சு
உலகின் பழமையான மொழியின் தாயகமாக தமிழ்நாடு உள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இன்று திங்கள்கிழமை சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மோதி ஆற்றிய உரை பின்வருமாறு: இது ஒரு குறிப்பிடத்தகுந்த கல்வி நிறுவனம்;…
காஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள் ஏற்கவில்லை- பாக். பிரதமர்!
காஷ்மீர் குறித்து தாம் சர்வதேச அரங்குகளில் எழுப்பிய பிரச்சினைகளை உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவை 130 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய சந்தையாக பார்ப்பதாகவும், என்றைக்காவது தமது கருத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர்…
காஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஐ.நா பேச்சு
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேசியபின், அந்தப் பேச்சுக்களின் தாக்கம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எதிரொலிக்கிறது. இம்ரான் கானின் பேச்சுக்கு பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள…
பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த மேலும் ஒரு குட்டி…
பஞ்சாப் மாநிலத்திற்கு பாகிஸ்தானால் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. எல்லையில் ஊடுருவிய கைதான தீவிரவாதியிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து அவன் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலத்தில் விழுந்துக் கிடந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லாத விமானத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்திய எல்லையான அட்டாரியில் விழுந்துக்…
இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும் என பாக். பிரதமர்…
இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா. பொதுக்குழுவில் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். பிரதமர் மோடி தமது உரையில் ஓரிடத்தில் கூட பாகிஸ்தானை குறிப்பிடாமல் பேசிய போதும் இம்ரான் கான் தமது உரையில் காஷ்மீர் மற்றும் இந்தியாவைப் பற்றி 25 முறை…
சீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு என்ன இழப்பு?
எந்தத் தொழிலும் தெரியாமல், உள்ளூர் மொழியான தமிழும் தெரியாமல் திருப்பூர் நகரத்துக்கு காலையில் வந்திறங்கியவர்கள், ஐந்து தெருக்களில் அலைந்து திரிந்து, பத்து பின்னலாடை நிறுவனப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் அன்றைய பொழுது சாய்வதற்குள் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். இது ஒருவேளை மிகையாக தெரியலாம். ஆனால், கடந்த இரண்டு -…
நீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள் ஆள்மாறாட்டம்..? உதித் சூர்யா…
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத, தனது தந்தை மூலம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, பிடிபட்ட மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் வேண்டாம்…
கீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பெண்
இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள்…
நரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா.…
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். ''உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100…
“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை” – உலக அணுசக்தி…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழுஅளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை என்று உலக அணுசக்தி தொழில் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அணு உலைகள், அணு ஆராய்ச்சி, அணு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கண்காணித்து வரும் அமைப்பு உலக அணுசக்தி…
நாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய்…
"பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம்," இவைதான் ஆளும் அரசின் மூன்று கோஷங்கள் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். "காஷ்மீருக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல்" என்ற தலைப்பில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் பேரணி நடைபெற்றது. சிரோன்மணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) முன்னெடுத்த இந்த பேரணியில்…
“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம்” –…
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மேலும் சில ஆள்மாறட்டப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது…