கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3374 ஆக…

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 3,374 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன்…

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை; சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்றுவரை…

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள்…

புதுடெல்லி ; டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில்…

மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம்…

கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து…

5 ரெயில்களில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பேரை கண்டறியும் பணி…

டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும்,…

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 2 ஆயிரத்து 32

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 பேராக அதிகரித்துள்ளது. 58 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக…

கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய…

கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த…

கொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்

சென்னை : 'இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்குகிறது. இயல்பான நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள், பெரும்பாலான மாநிலங்களில், கோடை காலமாக கருதப்படுகிறது. தமிழகத்தில்,…

கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் இபிஎஸ்

சென்னை: கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு…

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கிய மம்தா

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ள மம்தா பானர்ஜி, மக்களை கவர்ந்து வருகிறார். கொல்கத்தா: இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் போல், மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தடம் பதித்தபோதிலும், 26 பேருக்கு பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு என்ற அளவில் நிற்கிறது. கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா பரவாமல் தடுக்க கிராமத்தை காவல் காக்கும் இளம்பெண்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கிறார். தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23). பட்டதாரியான இவர் கிராமத்தலைவராக பணியாற்றி வருகிறார். தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது…

இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு- 102 பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே…

முஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி?

புதுடில்லி: டில்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்' என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மூத்த மத குருக்கள் உட்பட சிலர் சவுதி அரேபியா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு…

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் 200 கி. மீட்டர் நடந்து சென்ற நிலையில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து பலியானார். ஊரடங்கு உத்தரவு நியூடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அனைத்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், தொழிற்சாலைகள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பலி 26 ஆனது. நாடு முழுவதும் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. புதுடெல்லி,  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கின் 6-வது…

கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் – ஊரடங்கு…

புதுடெல்லி, பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அவர் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அந்த நோயை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்…

80 கோடி பேருக்கு இலவச அரிசி, கோதுமை, பருப்பு: நிர்மலா…

புதுடில்லி: கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும். ஏழைகள், கூலி தொழிலாளர்கள்…

இந்தியாவில் இதுவரை 649 பேருக்கு கொரோனா

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில்…

கொரோனாவை இந்தியா வெல்லும்: சீனா நம்பிக்கை

புதுடில்லி: கொரோனா தொற்று நோய்க்கு எதிராக சீனாவின் தீவிரமான போராட்டத்தில், முககவசங்கள், மருத்துவ உபகரணங்களை தக்க சமயத்தில் வழங்கிய இந்தியாவின் உதவிக்கு சீனா நன்றி தெரிவித்து. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவில் வெல்லும் என தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இந்தியாவிற்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங்…

ரெயில்வே துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு

கொரோனா காரணமாக நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே துறைக்கு…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 511-ஆக உயர்வு

இந்தியா முழுவதும் இன்று மதியம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 511-ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.…

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஆற்றல் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா போன்ற தொற்று வைரஸை எதிர்கொள்ள இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் தெரிவித்துள்ளார். 'கொரோனா வைரஸ்' தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில்  இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, …