இந்திய தலைநகரில் இராணுவம் குவிப்பு: இராணுவப் புரட்சியா?

இந்திய மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், கடந்த ஜனவரி மாதம், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு இராணுவப் புரட்சி என்ற வதந்தியும் வெளியாகியது. எனினும், அத்தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. இந்திய அரசு மற்றும் இராணுவம் மீது, சேற்றை வாரி வீச…

ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்

மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது. காந்தி பயன்படுத்திய…

அதிமுகவில் மீண்டும் சசிகலா; பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவருடன்  கணவர் நடராஜன்,  உறவினர்கள் ராவணன்,  திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.…

இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு

இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி…

கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்​குளம் உலைக்களம்!

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூடங்​குளம் அனுமின் நிலையத்தைச் சுற்றி முப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள்.…

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்காக 25 கோடியில் அபிவிருத்தித் திட்டம்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ்…