இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: அமெரிக்கா கடும் கண்டனம்

கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றின் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எக்ஸ் சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயண் இந்து கோவில் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்களை கண்டறியும் நோக்கில் நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 

 

-ht