கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த 2 இந்திய போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் ரோந்து

கடந்த 14-ம் தேதி அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 6 கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை கைப்பற்றியதாகவும் தங்களை காப்பாற்றக் கோரியும் சரக்கு கப்பலின் மாலுமி அவசர எச்சரிக்கையை அனுப்பினார்.

இந்த அவசர எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றிய, ஸ்பெயின், இந்திய கடற்படைகளுக்கு கிடைத்தது. ஐரோப்பிய ஒன்றிய, ஸ்பெயின் கடற்படை போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டன. கடந்த 16-ம் தேதி இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல், சரக்கு கப்பலை நெருங்கியதும் கடற்கொள்ளையர்கள் தப்பியோடினர். இந்திய கடற்படை வீரர்கள், சரக்கு கப்பலின் 18 மாலுமிகளை மீட்டனர்.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அரபிக் கடலின் பாதுகாப்பில் இந்திய கடற்படை முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

-ht