அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 60 ஆயிரம் படுக்கைகள் தயார்- மத்திய…

நாடு முழுவதும் கொரோனாவில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் 60 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் புதுடெல்லி: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.…

இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா

புதுடில்லி : இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : கொரோனா வைரசால், இதுவரை 270 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.…

வைரசை உடலில் ஒட்ட விடாத அந்த 14 மணி நேரம்-…

இந்தியாவில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்ததின் சூட்சுமம் என்னவென்று பார்ப்போம்... சென்னை:அடங்க மாட்டேங்குதே கொரோனா... என்ற பீதியில் உலகமே உறைந்து கிடக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் நாளை…

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இவர்களின்…

பல்கலை தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவு  

புதுடில்லி: கோரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, நாடுமுழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி(பல்கலைக்கழக மாணிய ஆணையம்) உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே திட்டமிட்ட செமஸ்டர் தேர்வுகளையும், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மார்ச் 31க்கு பிறகு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை…

இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்கொள்கிறது : மோடி

புதுடில்லி: இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது என பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். கொரோனா வைரசை தடுப்பது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். கொரோனா வைரஸ் உலகப்போர் போல் தாக்கத்தை…

சூரிய வெளிச்சத்தில் நின்றால் கொரோனா காணாமல் போகும்: மத்திய அமைச்சர்

புதுடில்லி: சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்களை போக்கிவிடலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய்க்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 180க்கும் மேற்பட்டோர்…

கொரோனா அச்சம் – பஸ், ரெயில்களில் கூட்டம் குறைந்தது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெளியூருக்கு பஸ் மற்றும் ரெயிலில் செல்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. புதுடெல்லி: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 7984 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேரை நோய் தாக்கி உள்ளது. சுமார்…

கோலாலம்பூரில் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க 2 விமானங்கள் செல்கிறது…

கோலாலம்பூரில் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து 2 விமானங்கள் இன்று கோலாலம்பூர் செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு- 14 பேர்…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். புதுடெல்லி: சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின்…

குடியுரிமை திருத்த சட்டம் : தமிழக அரசு இன்று ஆலோசனை

சென்னை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு வரும்படி, தமிழக அரசு சார்பில், முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க, தமிழக அரசு சார்பில்,…

சிறையில் இருக்கும் மகனுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

வீட்டுக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் உமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார். ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு…

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய…

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கவும் அனுமதித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 76-ஆக உயர்வு

கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: உலகம் முழுவதும் 127 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்பட்டு விட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இத்தாலி,…

ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரான் நாட்டில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள், தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர். சீனாவில் உண்டான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.…

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில்…

புதுடில்லி: ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு…

சர்வதேசப் பெண்கள் தினம்: இந்தியாவின் முதல் பெண் மாலுமி ஆன…

இன்று சர்வதேச பெண்கள் தினம். விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதைவிட தன்னைப்போல்…

இந்தியாவில் ஆண்களுக்கு சமமான உரிமை பெண்களுக்கு இருக்கிறதா

இந்தியாவில் ஆண்களுக்கு சமமான உரிமை பெண்களுக்கு இருக்கிறதா இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது என ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் நினைக்கின்றனர். இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் 10,000க்கும் மேற்பட்டோரிடம் இது குறித்து கேட்டறிந்தது. அதில் 91 சதவீதம் பேர் ஆம் என்றே பதில் அளித்துள்ளனர். இந்த ஆய்வில்…

தி.மு.க., பொது செயலர் அன்பழகன் காலமானார்

சென்னை :தி.மு.க.,வில், ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் இன்று(மார்ச்7) மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. தி.மு.க., பொதுச்செயலர்,…

கைகுலுக்காதீங்க: வணக்கம் சொல்லுங்க – மோடி யோசனை

புதுடில்லி: மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு, இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய உயிர்கொல்லி…

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து- மன்மோகன் சிங்

கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்து வருவதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார். புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய்…

நாளை (மார்ச்-05) விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி.,- எப் 10

சென்னை : பூமியை கண்காணிக்கும், 'ஜிஐசாட் - 1' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 10' ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி.,…

மார்ச் 15-ம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: வெங்காய வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது…