இந்திய-சீன உறவு ஆரோக்கியமாக இல்லை – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய - சீன உறவு ஆரோக்கியமாக இல்லை என்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்-கிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சீன…

தொற்று குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் கருவி தேவை – இந்தியா…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான கொள்கைகளை விரைவுப்படுத்த கேட்ஸ் அறக்கட்டளை, மத்திய அரசுடன் இணைந்து…

ரஷியாவுடனான உறவு, இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: பிரிட்டன் வெளியுறவு மந்திரி…

டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் கிளெவர்லி ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.…

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்: இலங்கை அரசிடம் விசாரணை கோரிய…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீதும், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் சமீபத்தில்…

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த…

இந்தியாவில் ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திர யானை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் பகுதியில் உள்ள ஆலயத்தில் இயந்திர யானையை வைத்துப் பூஜைகள் நடத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரிஞ்சடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் பூஜைகளில் உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. விலங்குகளை முறையாக நடத்தும் PETA நிறுவனமும் நடிகை பார்வதி…

ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல முயற்சி: தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட…

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட திட்டமிட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் (சிறப்பு பிரிவு) ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி கள் சமூக வலைதளங்கள்…

உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதார கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: அடுத்த நான்கு அல்லது…

கர்நாடகாவில் ரூ.384 கோடியில் புதிய விமான நிலையம்

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்துடன் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இது கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம்…

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை…

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து…

நாடு முழுவதும் என்ஐஏ சோதனை – 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…

என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டுவந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த…

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட…

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில்…

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஹிஜாப் அணிய தடை கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி நிர்வாகம், கடந்த ஆண்டு (2022) முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக…

இந்தியா-இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தகம்

இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் நேற்று கூறியதாவது: இஸ்ரேலின் முக்கிய துறை முகமாக விளங்கும் ஹைஃபாவை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது இந்தியாவின் மீது இஸ்ரேல் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன. இரு நாடுகளும் வலிமையான ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன.…

குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்- மாநில…

புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டு காலம், கல்வி பெறும் அடிப்படை காலம் ஆகும். மழலையர் கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளின் தடையற்ற கற்றல் அனுபவத்தை புதிய தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது.…

ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது

ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். பா.ஜனதா மாநாடு ஹாசன் மாவட்டம் பேளூரு அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜனதா செயல் வீரர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:- பா.ஜனதா கட்சியை தவிர…

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உலா – லாகூர் நிகழ்ச்சியில்…

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானுக்கு அதன் கோர முகத்தை…

சமூக வலைதளங்களில் மோதல், பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது…

கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் மீது ஊழல் புகாரை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் நேற்று முன் தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் ஒன்றை கிளப்பினார். அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக உள்ள ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மைசூருஆட்சியராக…

இந்தியாவில் 90 லட்சம் முதியோர்கள் மறதி நோயால் பாதிப்பு

மூளையில் நரம்பணுக்கள் செயலிழந்து ஞாபக மறதி ஏற்படுவதை டிமென்ஷியா என்கின்றனர். உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இந்த நோய் 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அமெரிக்காவை சேர்ந்தசதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தின.…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு. ‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர்…

பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன்

பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியுள்ளது. பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும். எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து பசில்கா பகுதியில் நேற்று…

மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன், ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களுடன் ‘ஹைபிரிட்’ ராக்கெட் செங்கல்பட்டு அருகில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள், பழங்குடி இன…