3 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி

 ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை ஒடிசா மாநில முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் இந்த தேர்தல் வெற்றிகள் ஒடிசா மாநிலத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிஜு ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

-ht