கடல் ஆமைகளை பாதுகாக்க ஒடிசாவில் ஏவுகணை சோதனை நிறுத்தம்

ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் ஆலிவ் ரிட்லே என்ற அரிய வகை ஆமைகள் ஜனவரி முதல் மார்ச் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் உள்ள ருஷிகுல்யா ரூகெரி என்ற இடத்தில் சுமார் 6.6 லட்சம் கடல் ஆமைகள் வந்து முட்டையிடுவது வழக்கம்.

இந்நிலையில் அழியும் நிலையில் உள்ள இந்த ஆமைகளை பாதுகாக்க ஒடிசா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தகடற்கரை பகுதிகளில் கடந்தநவம்பர் 1-ம் தேதி முதல் அடுத்தஆண்டு மே 31-ம் தேதி வரைமீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆமைகள், முட்டைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கடலோர காவல் படை போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து ரோந்து பணிகளும் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் டிஆர்டிஓ அடிக்கடிஏவுகணை சோதனைகளை நடத்துகிறது. இதிலிருந்து வெளிப்படும் பயங்கர வெளிச்சம் மற்றும் சத்தம் ஆமைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், ஏவுகணை சோதனைகளை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நிறுத்தும்படி டிஆர்டிஓ.விடம் வனத்துறை தெரிவித்தது. இதையடுத்து ஏவுகணை சோதனை 3மாதத்துக்கு நிறுத்தப்படுகிறது. ஆலிவ் ரிட்லே ஆமைகளின்பாதுகாப்புக்கு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

-ht