நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தைத் தீர விசாரிக்கும்படி அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விவாதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்பைத் திரு. மோடி நிராகரித்தார். சென்ற புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது திடீரென இரு ஆடவர்கள் பார்வையாளர் கூடத்திலிருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.
அவர்கள் வாசகங்களை முழக்கமிட்டதோடு கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர். கலகத்தில் ஈடுபட்டோரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
விசாரணை நடத்துவோர் கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறிய திரு. மோடி, சந்தேக நபர்களின் உள்நோக்கம் கண்டறியப்படும் என்றார்.
சம்பவம் தொடர்பில் ஆறு பேரை இந்தியக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
-ht