காஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள் ஏற்கவில்லை- பாக். பிரதமர்!

காஷ்மீர் குறித்து தாம் சர்வதேச அரங்குகளில் எழுப்பிய பிரச்சினைகளை உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியாவை 130 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய சந்தையாக பார்ப்பதாகவும், என்றைக்காவது தமது கருத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் விரக்தியுடன் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பயணம் முடித்து இஸ்லாமாபாத் திரும்பும் முன்பாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இம்ரான் கான், காஷ்மீருக்கு செல்லும் எந்த ஒரு தீவிரவாதியும் பாகிஸ்தானியரும் தங்களுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் எதிரிகள்தான் என்றும் கூறி நாடகமாடியுள்ளார்.

பிரதமர் மோடியை ஏன் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த இம்ரான் கான், காஷ்மீர் மக்களுக்கு மோடி செய்துள்ள காரியத்தால் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும்போது இது இருநாட்டு விவகாரம் என்றும்,இந்தியாவுடன் எழுப்பும்போது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்றும் மோடி கூறுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: