இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும் என பாக். பிரதமர் மிரட்டல்!

இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா. பொதுக்குழுவில் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தமது உரையில் ஓரிடத்தில் கூட பாகிஸ்தானை குறிப்பிடாமல் பேசிய போதும் இம்ரான் கான் தமது உரையில் காஷ்மீர் மற்றும் இந்தியாவைப் பற்றி 25 முறை குறிப்பிட்டார்.

காஷ்மீரில் பெரும் வன்முறைகள் நிகழும் என்றும் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணு ஆயுதப்போரில் ஈடுபட நேரிடும் என்றும் இம்ரான் கான் இரண்டுமுறை மிரட்டும் வகையில் பேசினார். காஷ்மீர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.

ஒவ்வொரு தலைவருக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி 17 நிமிடங்களில் தமது பேச்சை முடித்துக் கொண்டார். ஆனால் இம்ரான் கான் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக பேசி இந்தியா மீதான தமது பகையை பறைசாற்றினார்.

பிரதமர் மோடி , ஆர்.எஸ்.எஸ் மீதும் இம்ரான் கான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா தனது ஐநா உரையில் பாகிஸ்தானை குறிப்பிடாமல் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. இம்ரான்கானின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

-athirvu.in

TAGS: